ஐயா ,
தங்களின் அரசியல் கட்டுரைகளை தொடர்சியாக தினமலரில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
உங்கள் அரசியல் கட்டுரைகள் செறிந்த சிந்தனை வளமும், ஆழமான தகவல்களும், உலகளாவிய கழுகுப் பார்வையுடன் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .
உங்கள் கட்டுரை படித்த பின். 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளரை அறிவித்த தனித்து போட்டியிடும், பிரிவினை பேசும், சந்தன வீரப்பனை தமிழ் தலைவராக கொண்டும், பக்கத்துக்கு நாட்டின் பிரிவினை பற்றி இங்கு பேசும் அரசியலை , உங்கள் கட்டுரையில் நல்ல முன் உதரணத்துடன் விளக்கி இருக்கிறீர்கள்.
இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறோம்.
நன்றி
சு. கருணாகரன்