என்றுமுள ஒன்று… விஷ்ணுபுரம் பற்றி

Vishnupuram wrapper(1)விஷ்ணுபுரத்தின் ஐந்தாம் பதிப்பு கிழக்கு வெளியீடாக வரவுள்ளது. ஷண்முகவேல் வரைந்த இந்த ஓவியம் அதன் சாரமாக உள்ள ஞானத்தேடலின் சிற்ப வடிவம்

இன்று தளத்தில் வெளியான ஷண்முகவேலின் விஷ்ணுபுரம் முன்னட்டை ஓவியத்தை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். பால்வெளி அண்டத்தில் பள்ளிகொண்டிருக்கும் விராடபுருஷன். அவன் கொப்பூழில் எழும் படைப்புத்தெய்வம். அந்தப் பிரம்மாண்டத்தைத் தன் அகத்தில் நோக்கி நிற்கும் ஆசிரியன். மனதில் கனவை நிறைக்கும் அபாரமான ஓவியம்.
வேறொரு கணத்தில் தோன்றியது. அந்தச் சிற்றுருவன் வாசகன்தானோ? எழுத்தில் விரிந்துநிற்கும் பிரபஞ்சத்தையும் படைப்புலகையும் இன்னும் பலவற்றையும் வியந்துநோக்கும் வாசகன். ஷண்முகவேல் ஏன் பன்னிரு படைக்களத்திற்கு வரையவில்லை?
திருமூலநாதன்
அன்புள்ள ஜெ
இதுவரை உங்கள் படைப்புகளுக்கு வந்த அட்டைகளிலேயே மிகச்சிறப்பானது விஷ்ணுபுரம் இந்த பதிப்புக்கான அட்டைதான்
ஞானமரம். ஞானத்தின் படிக்கட்டு. அல்லது கனவின் சுருள்பாதை. அல்லது வரலாற்றின் எஞ்சிய ஒற்றைப்பெருந்தூண்
என்ன சொல்ல
வாழ்த்துக்கள் சண்முகவேல்
சாரங்கன்

விஷ்ணுபுரம் என்னும் பலமடிப்புப் படைப்பு

விஷ்ணுபுரம் முன்னுரைபற்றி கேசவமணி

விஷ்ணுபுரம் ஒரு மகத்தான கனவு

புனைவின் ஆடி

அழியாக்கனவு

விஷ்ணுபுரம் வாசிப்பு கடிதம் விஜயரங்கன்

விஷ்ணுபுரம் கடிதம் சிவக்குமார்

விஷ்ணுபுரம் மீண்டும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32
அடுத்த கட்டுரையாகவா ஆயினும் நாகாக்க!