தினமலர் – 30: தேசியம் என்னும் கற்பிதம்

அன்புள்ள ஜெயமோகன்

தேசியம் என்னும் கற்பிதம் கட்டுரை ஒரு குறிப்பு என்றே சொல்லவேண்டும். ஆனால் அதற்குள் தேசியம் என்னும் கருத்து உருவாகிவந்த விதம், பண்பாட்டுத்தேசியத்தின் தொன்மை, பண்பாட்டுத்தேசியம் நவீன தேசியமாக ஆகும் விதம் அனைத்தையும் சொல்லி மேலும் மேலும் ஒன்றாகத்திரள்வதே முன்னே செல்லும் வழி பிளவுறுவது நசிவின் வழி என ஆணித்தரமாக நிறுவியிருக்கிறீர்கள்

சத்யமூர்த்தி

 

images

ஜெயமோகன்,

அணைக்க முடியாத நெருப்பு  கட்டுரை புதிதாகவேண்டிய  விஷயங்களை   எனக்கு சொன்னது. ஐரோம் ஷர்மிளா வை எனக்கு பெரிய அஹிம்சா வழிப் போராளியாக அறிமுகம்.  நீங்கள் கூறும் கோணம் புதிது. அங்கே கிழக்கே ஒரு சிலரை தவிர  தேசிய அளவிலான தலைவர்கள் குறைவு. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.  அந்த பகுதியின் மந்த நிலைக்கு.

நீங்கள் கூறும் வெறும் 50 வருடங்களில் எத்தனை பெரிய வாழ்வியல் மாற்றங்கள்.

எத்தனை சோதனைகள்  வந்தாலும் ஜனநாயகமே சிறந்த வழி.

நடராஐன்

அன்புடைய ஐயா,
            தினமலர் நாளிதழில் தாங்கள் எழுதிவரும் கட்டுரையை கடந்த இரண்டு நாட்களாக படித்துவருகிறேன்,அற்புதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது தங்கள் கட்டுரை.மனதில் ஓடிக்கொண்டிருந்த சில தேவையற்ற எண்ணங்களை வேருடன் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெற்றுள்ளது மிக்க நன்றி.
குணா தமி
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

“அணைக்க முடியாத நெருப்பு” தினமலர் கட்டுரையில் இவ்வாறு எழுதி இருப்பது (“ஐரோம் ஷர்மிளாவுக்கு இந்தக் கொலைகள் மானுட உரிமை மீறல்களாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு கலவரத்தை அடக்க ராணுவம் சுட்டு இருவர் கொலையுண்டால் அதை ‘மணிப்பூர் மக்களுக்கு எதிராக இந்தியாவின் தாக்குதல்’ என்று அவர் சொல்கிறார். உலக ஊடகங்களும் இந்தியாவின் கூலி அறிவுஜீவிகளும் அதை மேலும் மேலும் கூவுகின்றன. நாம் கேட்பது அவர்களின் குரலை மட்டுமே”) எவ்வளவு அறிய உண்மை என்பதை கடந்த நான்கு நாட்களாக காஷ்மீரில்  நடந்து வரும் ராணுவம் மற்றும் காவல் துறைக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தேவையற்ற அராஜகமான போராட்டம் நன்கு உணர்த்தி வருகிறது.பள்ளிச்சிறுமியிடம் உள்ளூர் மாணவர்கள் தகாத முறையில் நடந்துகொண்டதை இராணுவத்தினர்தான் செய்தனர் என்று திசை திருப்பியதால்  அநியாமாக நாலைந்து பேர் கலவரத்தில் இறக்க நேரிட்டது.ஒரு தேசிய நாளிதழ் உள்பட பல ஊடகங்கள் இராணுவத்தினர்தான் இந்த இழி செயலை செய்தனர் என்று கூசாமல் புளுகினர்,ஹுரியத் கிளர்ச்சிக்காரத்  தலைவன் மீர்வாஸ் உம்மர் பாருக்  ஒருபடி மேலே சென்று இது சம்பந்தமாக “இஸ்லாமிய மாநாட்டு அமைப்புக்கு (Organisation of Islamic Conference) “ இந்தியா காஷ்மீர் மக்களுக்கு எதிராக ராணுவத்தைக்கொண்டு போர் நடத்தி அப்பாவி மக்களைக்கொல்கிறது  அதை தடுக்கவேண்டும் என்று பொய்யாக கடிதம் எழுதி உள்ளார்.  தற்போது அந்தப்பெண் உள்ளூர் நீதிஅதிகாரியிடம் இந்த இழி செயலை செய்தது இராணுவத்தினர் அல்ல உள்ளூர் மாணவர்கள்தான் என்று தன் தந்தையுடன் நேரில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட அப்பட்டமான பொய் பிரச்சாரங்களுக்கு இடையிலும் ராணுவத்தினர் பணியாற்றுவது இங்கு எத்தனைபேருக்கு தெரியும்?

நன்றி,

அன்புடன்,

அ .சேஷகிரி.

இன்றைய தினமலர் நீர்ப்பாசி கட்டுரை வாசித்தேன்.கண்டுபிடிக்க முடியாத மிருகம்  உவமை சாலப் பொருந்தும்.

தமிழகத்தில் உள்ள இந்த Populist movements எல்லாம் நீங்கள் கூறும் அன்றைய சூழலில் எடுபடும் பிரச்சனைகளை பேசி ஆட்சியமைக்க செய்யும் தந்திரம் செய்பவர்கள்.

   இலங்கை தமிழர், இந்தி திணிப்பு,  விலைவாசி, மின்சாரம்,  மதுவிலக்கு ,ஜாதி ஒழிப்பு  , போலி பகுத்தறிவு பல வகையான அன்றைய தேவைக்கேற்ப பரப்புரை நிகழ்த்தி மக்களுடைய அபிமானத்தை  பெற முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். 60 களில் தொடங்கிய இந்த நிலை இன்று வரை நீடிக்கிறது. அதன்   பரிணாம வளர்ச்சி ( latest  version)  தான் திரு மங்கலம் formula.

தமிழனின் இன்றைய தலையாய தேவை பணமே என்றுணர்ந்தால் அதுவே மிக பெரிய ஆயுதமானது தீயவர்கள் கையில்.
இந்த கொள்கை , இலட்சியம் எல்லாம் சும்மா பம்மாத்து. இடையிடையே   மானே தேனே போட்டுக் கொள்வது போல.

தாள்களில் அச்சிட்டு காகித கப்பலும்,  பட்டமும் விட தான் லாயக்கு இவர்களின் தேர்தல் அறிக்கைகள்.

ஆமென்.

நடராஜன்

 

முந்தைய கட்டுரைகொடிக்கால் – தியாகங்களுக்குமேல் திரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 26