தினமலர், 29:அணைக்க முடியாத நெருப்பு

images

 

அன்புள்ள ஜெயமோகன்

இன்றுவெளிவந்த கட்டுரையான அணைக்கமுடியாத நெருப்பு  முக்கியமானது

தேர்தல் காலங்களிலேயே இம்மாதிரியான நெருப்புக்கள் பற்றவைக்கப்படுகின்றன. அரசியல் என்ற பேரில் காழ்ப்புகள் உருவாக்கப்படுகின்றன

நான் மணிப்பூரில் மருத்துவப்பணி செய்தவன் உங்கள் ஒவ்வொரு சொல்லும் உண்மை. நினைத்து நினைத்து மனம் வருந்தியதுண்டு. அந்த மக்களுக்கு விடிவுகாலமே இல்லையா என்று எண்ணியதுண்டு

இனக்குழு காழ்ப்பு காரணமாக அவர்கள்தான் தங்கள் கூரைமேல் தீயை வைத்துக்கொண்டார்கள். இப்போது அணைக்கமுடியாமல் தவிக்கிறார்கள்

எபநேசர் செல்வன்

 

*

குருதியோட்டத்தில் இணைவது கட்டுரை மீண்டும்  ஒரு கூரிய நோக்கு. பல  இடங்களிலுள்ள வணிக அங்காடிகள் மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை அளவீடு செய்ய உதவுகின்றன .அவ்வாறே பல ஊர்களில் உள்ள  கட்டுமான மற்றும் பொருளாதார நிலைமை அந்த மாநிலத்தின் வளர்ச்சியை பறைசாற்றுகின்றன.

என் ஊர்,  என் மொழி , என் மக்கள் என்ற  நல்லதொரு அடையாளம்  வெறியாக மாறி விட்டன.  எந்த ஒரு இயக்கமும் அதை சார்ந்தவர்களின் பார்வையை விரிவடைய தான் செய்ய வேண்டுமே தவிர குறுகிய நோக்கத்தை போதிக்க கூடாது. மாறாக இந்த 20 வருடங்களாக  தமிழ்நாட்டில் தேசிய ( குருதியோட்டத்தை) நீரோட்டத்தை சீரழிக்கும் சக்திகளே வலுப்பெற்றுள்ளது நமக்கு நல்லதல்ல.

பீகார் ,ஒரிசா போன்ற மாநிலங்களில் ஆளும   மற்றும்  பலம் பொருந்திய கட்சிகள் மாநில கட்சிகளாக இருப்பினும் தேசிய பார்வை கொண்டவை.  அதன் நல் விழைவு அவர்களின் சமீபத்திய முன்னேற்றங்கள்.

தமிழகத்திலும் இந்த  அகலப் பார்வை கொண்ட  இயக்கங்கள் வலுப்பெற்றால் நலம்.காத்திருப்போம்.

நடராஜன்

முந்தைய கட்டுரைஇரு ஈழ இளைஞர்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25