அன்புக்குரிய எழுத்தாளர் சகோதரர் ஜெயமோகன் அவர்களுக்கு
தேனியிலிருந்து டாக்டர்அப்துல்லா அனுப்பும் செய்தி
தாங்கள் தினமலர் நாளிதழில் தினமும் எழுதிவரும் ஜனநாயக சோதனை சாலையில் இன்று வெளியான குடிமகனின் சுயமரியாதை என்றதலைப்பில் தங்களின் படைப்பை மிகவும் விரும்பி படித்தேன் மிக நன்றாக உள்ளது தங்களின் பணி சிறப்பாக தொடரவாழ்த்துக்கள்
டாக்டர் அப்துல்லா
அன்புள்ள ஜெமோ,
நீங்கள் தினமலரில் எழுதிய ‘குடிமகனின் சுயமரியாதை’ கட்டுரையை வாசித்தேன். Couldn’t agree more என்றே சொல்ல வேண்டும்.
என்னைப் பொறுத்த வரையில், தமிழகத்தில் பொதுவாக ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் என்றொரு சந்தை இருக்கிறது. அச்சந்தையே அடக்குமுறைகளை உருவாக்குகிறது, மக்களை ஒடுக்கி அடிமைகளாக்க முனைகிறது. குறுநில மன்னர்களை உருவாக்குகிறது.
இதற்கான சான்றை இங்குள்ள பள்ளிகளும் கல்லூரிகளிலும் காணமுடியும். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பான ஒழுங்குமுறைகள் இருக்கும் (கல்வித்தரம் இல்லாத) கல்லூரிகளில் சேர்க்க விரும்புகிறார்கள். இதை கல்லூரி முதல்வர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எப்போதும் ஏழெட்டு எடுபிடிகள் சூழ்ந்திரு க்கும் அவர்களை யாரும் எளிதில் காண முடியாது. கைகளைக் கட்டிக்கொண்டே பேச வேண்டும். என் மகனை ஒரு பள்ளியில் சேர்க்க முயன்றபோது கண்ட நிதர்சனம் இது.
சில பள்ளி-கல்லூரி முதல்வர்களே இப்படியிருக்க, மந்திரிகளும் முதலமைச்சர்களும் இப்படி நடந்துகொள்வதில் என்ன ஆச்சரியம் ?
அன்புடன்
கிஷோர்