தினமலர் -கடிதங்கள்

1

 

அன்புள்ள ஜெயமோகன்

I’m happy to write to you first time…
“தமிழக அரசியலையே சினிமா தீர்மானிக்கிறது என்று சொல்லிவிட்டு நான்கே நான்கு பெயர்களை தான் உங்களால் சொல்ல முடிகிறது”…

இதில் மூன்று பேர் ஏறத்தாழ 50 வருட தமிழக அரசியல் வரலாற்றை நிர்ணயித்தவர்கள்… வெறும் மூன்று சினிமாக்காரர்கள்தானே தானே…ரொம்ப சாதரணமாக சொல்லிட்டிங்களே…
 
kind regards,
Rajasekaran

 

 

ஜெ 
 
இன்னும் பெரும்பான்மையினர் ஏழ்மையிலும் நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டலிலும் இருக்கும் போது, இந்த நிலைப்பாடு நியாயமற்றது.
நான் முதலாளித்துவ ஆதரவாளன். எனக்கு அரசு அதிகாரிகளைவிட முதலாளிகளே மேல் என்னும் எண்ணமே இருக்கிறது. ஏனென்றால், முதலாளிகளை பல்வேறு பொருளாதார அமைப்புகள் கட்டுப்படுத்தும். பங்குச்சந்தை கட்டுப்படுத்தும். தொழிற்சங்கம் கட்டுப்படுத்தும். சர்வாதிகார அரசின் அதிகாரிகளை மக்கள் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.
மங்கை
PS: Not dismissive of other aspects discussed. You have made a point and it definitely calls for an open minded discussion.
அன்புள்ள மங்கை,
முதலாளித்துவம் முதலாளிகளுக்கு மட்டுமானது, கம்யூனிசம் தொழிலாளர்களுக்கானது என்னும் எலிய ஒற்றைவரியை நான் ஏற்பவன் அல்ல. அது மிக எளிமையான ஒரு பொதுப்புரிதல்.

முதலாளித்துவ அமைப்பு என்பது  முதல்குவிப்பு > பெருமளவிலான உற்பத்தி > லாபம் > அறிவியல் வளார்ச்சி > நலத்திட்டங்கள்  என்னும் போக்கில்  தொழிலாளர்களுக்கும் நன்மை தருவது என்பதே நடைமுறையில் நாம் காண்பது

அதேசமயம் இங்கு மட்டும் அல்ல எங்கும் முற்றதிகாரம்> அரசுநிர்வாகம் > ஊழல்> முதலீட்டுப்பதுக்கல் என்னும் பாதையில்செல்லும் கம்யூனிசம் எவ்வகையிலும் தொழிலாளர்களுக்கு உதவியதில்லை. சீனாவானாலும் சரி ,மேற்குவங்கமானாலும் சரி

ஜெ

அன்பாசிரியருக்கு வணக்கம்,
தங்கள் தினமலர் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன், நிறைய கட்டுரைகள் காந்திய அணுகுமுறையை விளக்குகிறது.
நான் இக்கட்டுரைகளை மேலும் புரிந்துகொள்ள தங்களின் “காந்தியம் இன்று” உரை மிகப்பயனுள்ளதாக இருக்கிறது.
ஒவ்வொரு வாக்காளனும் சிந்தித்து வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகம் வெற்றி பெறும் என்பது நூறு சதவிதம் உண்மை.
“மக்களின் சிந்தனைமுறையை, வாழ்க்கைமுறையை மாற்றாமல் அரசியல் மாற்றத்தை உருவாக்கமுடியாது”
உங்கள் வாசகர்களாகிய நாங்கள் அந்த மாற்றத்தை உருவாக்குவோம்
என் நண்பர்களுக்கு தங்களின் கட்டுரை இணைப்புகளை அனுப்பி பகிர்ந்துகொள்கிறேன்
இக்கட்டுரைகளின் தொகுப்பு நூல்வடிவில் நிச்சயம் வரும் என்று ஆவலுடன் இருக்கிறேன்

நன்றி வணக்கம்,
அன்புடன்,
வை. தாமோதரன்,

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு “யதா பிரஜா ததா ராஜா ” (மக்கள் எப்படியோ  அப்படியே அரசன்) என்று,நாம் எவ்வளவு தூரம் நேர்மையாக இருக்கிறோமோ  அதற்கேற்றார்ப்போல்தான் ஆட்சியாளர்கள்  நமக்கு அமைவார்கள் என்பது நியதி.இரண்டு நாட்களுக்கு முன் தங்கள் தளத்தில் வெளியானகுற்றத்தின் விலை” என்ற  காணொளிப் படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.அந்த வயதான கதியற்ற பெண்மணிக்கு இருக்கும் நேர்மையான எண்ணம் கூட படித்த வசதி உள்ள நம்மை போன்றவர்களுக்கு இல்லையே? பின் ‘‘ திருமங்கலம் அரசியல் வியாதிகளை” குறை சொல்ல நமக்கு என்ன யோக்கியதை இருக்கு?

அன்புடன்,

அ .சேஷகிரி.

 

தினமலரில் வெளியான இரண்டுக்கும் நடுவே கட்டுரை படித்தேன்.

பிர்லா குடும்பம் பார்சிகள் இல்லை, அவர்கள் மார்வாடிகள்.
மேலும் சமண சமயத்தினர் என்பதால் புலால் மற்றும் மது வியாபாரம் செய்ய வேண்டும் என்பதால் அவர்கள் ஹோட்டல் தொழிலில் இதுவரை ஈடுபடவில்லை. அவர்கள் எப்படி ஒபியம் வியாபாரம் செய்து இருக்க முடியும்.
அதுபோலவே டாடா குடும்பமும் ஒபியம் வியாபாரம் செய்ததாக இதுவரை நான் படித்து இல்லை,
இந்த இரு குடும்பத்தினரும் ஒபியம் வியாபாரம் செய்ததாக வேறு எங்காவது ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதா ?
அன்புடன்
இராமச்சந்திரன்

 

அன்புள்ள ராமச்சந்திரன்,

ஆம், பெருமுதலாளிகள் என்பது பார்ஸி என்று வந்துவிட்டது. பார்ஸிகள் முத்லிய பெருமுதலாளி வர்க்கம் என்றுதான் நான் உத்தேசித்தது. [இக்கட்டுரைகள் சொல்லி எழுதப்படுபவை]

திருத்துகிறேன்

டாட்டா பிர்லா இரு பாரம்பரியமுமே ஏற்றுமதிப்பின்புலம் கொண்டவை. அப்போதுதான் இந்தியாவின் ஏற்றுமதித்தொழில் உருவாகி வந்தது. அன்றைய முக்கிய வணிகம் அபின்

 

இது அவர்களின் ‘அதிகார்பூர்வ’ வரலாறு அல்ல.ஆகவேதான் நான் நாவலை மேற்கோள்காட்டினேன்.

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைதினமலர் 20, இரண்டுக்கும் நடுவே
அடுத்த கட்டுரைஓப்பியமும் முதலாளித்துவமும்