ஜெ
இன்றைய தினமலரில் ’இரண்டுக்கும் நடுவே’ என்னும் அற்புதமான கட்டுரை வாசித்தேன்.
அது கட்டுரை அல்ல, குறிப்புதான். ஆனால் மிக ஆழமானது. வரலாற்று நோக்கு கொண்டது. பல செய்திகள் ஒரு பெரிய திறப்பாக இருந்தன
இலிங்கேஸ்வரன்
அன்புள்ள ஜெயமோகன்
இரண்டுக்கும் நடுவே வாசித்தேன்
உங்கள் அரசியல்கட்டுரைகள் அனைத்திலும் இருப்பது ஒட்டுமொத்தமான ஓர் அரசியல் பார்வை. இந்தக்காலத்தில் இப்படி எழுதும் கட்டுரையாளர்கள் மிகக்குறைவு. இன்றைக்குள்ள அரசியலைத்தான் மாறி மாறி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
மிகமுக்கியமான கட்டுரை
செல்வா
*
இன்றைய தினமலர் படித்தபின் காமராஜர் அவர்களுடைய பொய்யற்ற உடல்மொழி நினைவுக்கு வருகிறது.காரணம் நீங்கள் கூறும் மடியில் ஒரு துளி கனமில்லாத வாழ்க்கை தான்.
சற்று ஆழமாக பார்த்தால் கிட்டத்தட்ட 90 சதமான பேர் ஐம்பது ரூபாய் வரவு செலவு அளவு கோலை தாண்டுவது கடினம். எனக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. இந்த தலைவர்களால் மக்கள் இப்படியா? மாறாக மக்கள் தான் காரணமா? முரண் இயக்கமா?
எதுவாக இருப்பினும் காந்தி கழிப்பறைக்கு போராடியதை விட அதிகமாக கவனிக்க வேண்டிய தேவை திருமங்கலம் பார்முலாவுக்கு உள்ளது.
வயது வந்த இளைஞன் ஒரு குடும்பத்தில் மறுத்தால் குடும்பமே மாறும் குற்ற உணர்வில்.
நடராஜன்