அன்புள்ள ஜெயமோகன் ஆசிரியர் அவர்களுக்கு
நடிகர் நாடாளும்போது என்னும் கட்டுரை வாசித்தேன். ஒரு பொதுநம்பிக்கைக்கு எதிராகப்பேசியிருக்கிறீர்கள், அவ்வளவுதான். முழுக்க உண்மை இல்லை. நடிகர்களுக்கு பிற எவரை விடவும் அதிக வாய்ப்புக்கள் இங்கே உள்ளன என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அதற்கு அவர்கள் தகுதியானவர்களும் இல்லை.
நடிகர்களைத்தவிர நம் மக்கள் எவரையுமே தெரிந்துவைத்திருப்பதில்லை. மயில்சாமி அண்ணாதுரையோ அல்லது சகாயமோ மக்களால் அறியப்பட்டவர்கள் அல்ல. இந்த அவலநிலையை நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கவேண்டும்
நாராயணமூர்த்தி
***
வணக்கம்.
உண்மையை உரக்கப் பேசியதற்காக தமிழகம் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறது.
அன்புடன்
சுப்பு
***
அன்புள்ள ஜெயமோகன்
இன்றைய கட்டுரை நன்றாக உள்ளது
நடிகர் நாடாளலாமா என்பது ஒரு பக்கம். முக்கியமானது.நம் இதழ்களில் உள்ள ‘அறிவுஜீவிகள்’ எப்படி ஒருவரை அவரது விருப்பத்துக்கு மாறாக கோமாளியாகவோ முட்டாளாகவோ காட்டுகிறார்கள் . எண்டியாரின் சாதனைகள் நீங்கள் சொல்லி அறிந்தேன். அவரை நானும் ஒரு கோமாளியாகவே நினைத்திருந்தேன். மெத்தப்படித்த கோமாளிகள் நடுவே அவர் ஒரு பெரிய மனிதர்
நரசிம்மன்
தினமலர் கட்டுரை இணைப்புக்கள்