தினமலர் கடிதங்கள்

Tamil_News_large_1481446

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய கட்டுரையில்“நன்மை செய்யும் சர்வாதிகாரி என்று எவரும் இல்லை. நன்மை செய்யும் எண்ணத்துடன் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து அவர்களால் நன்மை செய்ய முடியாது” என்று சரியாக கணித்துள்ளீர்கள். இதற்கு நடைமுறை உதாரணம் முதன் முதலில் தமிழ் நாட்டில் ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆர். அவர்கள். பின்னர் அவரும்,அவர் கட்சியும் வந்து சேர்ந்த இடம் நாம் அறிந்ததே.

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

ஆசிரியர் திரு ஐெயமோகன் அவர்களுக்கு

தங்களதுஜனநாயக சோதனை சாலையில்-8:யாருடைய கூலி பெறுகிறார்கள்என்ற கட்டுரை குறித்து

வடதமிழகத்திற்கே நீராதாரமாக விளங்கும் வீராணம் ஏரி சோழர்களால் வெட்டப்பட்டது. அதை துார்வார தமிழக அரசு திட்டமிட்டது. நிதிவசதி இல்லை என கைவிட்டது.என்று சொல்லி உள்ளீர்கள் உடன்படுகிறேன்.அதில் ஒரு உண்மை காலத்தால் மறைக்கப் படுகிறது

வீராணம் ஏரிப் பாசனத்தால் உயிர் வளர்த்த நாங்கள் மவுனமாக கையறுநிலையில்பார்த்து கொண்டு இருக்கிறோம் கிட்டத்தட்ட வெண்முரசில் வரும் நாகர்கள் போல் எங்களுக்கான வெய்யோன் வரும் காலத்தை எதிர் பார்க்கிறோம்காலம்காலமாக வீராணம் ஏரி நீரை நம்பிப்பயிர் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அவர்கள் எதிர்காலத்தையும்  மறந்துபெரும் மழை பொழிவு

வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியது சென்னைக்கு இவ்வருடம் குடிநீர் பஞ்சமில்லை என்று பத்திரிக்கையும் தொலைகாட்சியும் செய்திகளை தமிழக முழுவதும் பரப்புகின்றனவீராணம் ஏரி கடை மடைக்கு தண்ணீர் தராமல் பயிர்கள் காய்வதும் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் போரடியே தண்ணீர் பெறுகின்றனர்

சம்பா பருவம் முடிந்தும் இன்றும் பயிர்கள் தண்ணீருக்காகக் காத்து நிற்கின்றன 2004 க்கு பிறகு அதன் பாசனப்பரப்பு குறைந்து விவசாயிகள் நிலங்களை விற்று விட்டு கூலிகளாக இடம் பெயர்கிறார்கள் இதன் தாக்கம் எப்போதோ ஆரம்பித்து விட்டது அடுத்த பத்தாண்டுகளில் மிக மோசமாக தெரியும்.வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் நீர்வளம் இல்லாத வறண்ட நிலப்பகுதிக்கு விவசாய நீர் ஆதாரமாக தன்னலமற்ற அரசன் ராதித்தனால் வெட்டப்பட்டது.

உலகின் மிக சிறந்த நீர் மேலாண்மை செய்தநாம் இன்று தண்ணீருக்கு விவசாயிகளின்கண்ணீரை கேட்க்கிறோம்

சென்னை ஒட்டி ஏரிமாவட்டமாம் செங்கல்பட்டு வை விட்டு விட்டு கழக ஆட்சிகளில்வீராணம் பெயரால் மாறி மாறி வசதியாக ஊழல் செய்து விவசாயிகளுக்கு இல்லாமல் நீரை கொண்டு  சென்று விட்டனர். அப்பாசன பகுதி விவசாயிகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் தருவதை உறுதி செய்ய வேண்டும்யார் செய்வார்?

அன்புடன்
தி.வேல்முருகன்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் யானை நடை கட்டுரை படித்தேன்.அருமையான கட்டுரை.நீங்கள் சர்வாதிகாரி குறித்துக் கூறும்போது நான் சிங்கப்பூரின் திரு.லீகுவான் யூவை நினவு கொள்கிறேன்.சிங்கையில் அவரது கட்சி 1965 முதல் இன்று வரை ஆட்சியில் இருக்கிறது.அவருக்குச் சரி என்று பட்டதை உறுதியுடன் எந்த எதிப்பு வந்தாலும் அதை மீறிச் செய்யும் செயலாற்றல் அவரிடம் இருந்தது.மேலும் சிறுபான்மையினரை வைத்து அரசியல் செய்யவில்லை.அவரது ஆட்சியில் சில முடிவுகளில் தவறு இருந்தது.ஆனால் அதை உணர்ந்து சரிசெய்து முன்னேறினார்.இன்று சிங்கையின் பொருளாதாரம் அவரது சிந்தனையின் அஸ்திவாரத்தில் வானளாவ உயர்ந்து நிற்கிறது.அவர் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தாலும் தான் நினைப்பதைச் செயல்படுத்தும் வலிமை அவரிடம் இருந்தது.இது குறித்து தங்களின் மேலான கருத்தை தங்களின் வலைதளத்தில் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

என்றும் அன்புடன்

இரா.பாலாஜி

முந்தைய கட்டுரைதினமலர் – 14: யானைநடை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 9