«

»


Print this Post

வரலாற்றாய்வின் வன்முறை


index

ரொமீலா தாப்பர்

 

ஒத்திசைவு’ ராமசாமி அவர்கள் அவரது வழக்கமான தவளைநடையில் ஏகப்பட்ட சுயபகடி ,பிறகேலிகளுடன் எழுதியிருந்தாலும் இந்தக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று.இர்ஃபன் ஹபீப், ரொமிலா தாபர் போன்ற ‘வரலாற்றாய்வாளர்கள்’ + தஹிந்துத்துவா அரைகுறைகள்: இவர்களைப் புரிந்துகொள்வது எப்படி

டி டி கோஸாம்பி மரபைச்சேர்ந்த இந்திய வரலாற்றாய்வு முறைமை மார்க்ஸிய செயல்திட்டத்தின் அடிப்படை விதிகளின்படி முதலில் நிறுவனங்களைக் கைப்பற்றியது. ஆனால் இந்திய அரசியல் வழக்கப்படி ஓர் அதிகாரபீடமாக இறுக்கிக்கொண்டது

உயர்கல்வித்துறையில் முழுமையாகவே மாற்றுவிவாதங்களை நிராகரிக்கும். ஒற்றைப்படைப்பிரச்சரமே ஆய்வு என்னும் நிலைக்கு அதைக்கொண்டுசெல்லும் போக்கு ரொமிலா தாப்பர், பணிக்கர் முதலியோரால் முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்குரல்களை அழிப்பது, மாற்றுவாதங்களை முத்திரைகுத்தி ஒழிப்பது போன்றவற்றில் பணிக்கர் ஒரு மேதை. ஆர்.எஸ்.சர்மா, இர்ஃபான் ஹபீப் முதலிய சற்றே நிதானமான ஆய்வாளர்கள் கூட இவர்களின் வழிகளைத்தான் தொடரவேண்டியிருந்தது.

 

எம்.ஜி.எஸ்.நாராயணன்

எம்.ஜி.எஸ்.நாராயணன்

 

எம்.கோவிந்தனின் வழிவந்தவரும் நடுநிலை நோக்கு கொண்ட ஆய்வாளருமான எம்.ஜி.எஸ் நாராயணன் போன்ற ஒருவரையே இவர்களால் தாளமுடியவில்லை. ஃபாசிச முத்திரை அவர்மேலும் குத்தப்பட்டது. அமைப்புகளிலிருந்து அவரும் வெளியேற்றப்பட்டார்.

உண்மையில் இவர்களின் தரப்பு மிகமிக வலுவானதாக இருக்கலாம் என்றே வைத்துக்கொள்வோம், ஆனால் ஒர் உயர்கல்வித்தளத்தில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் மறுதரப்பே எழவிடாமல் செய்தபடி இவர்கள் செயல்பட்டார்கள் என்பதும், மறுதரப்புகள் மேல் வெறும் காழ்ப்பையும் கசப்பையுமே கொட்டியிருக்கிறார்கள் என்பதும் மிகமிக வருந்தத்தக்கது

இப்போது இவர்கள் ஃபாசிசம் என்று கூச்சலிட்டு கும்பல்கூட்டுவதன் பின்னாலுள்ள உளவியல் இவர்களின் அதிகாரம் நழுவுகிறது, இவர்களின் குரல்கள் மறுக்கப்படுகின்றன என்பதே. ஃபாசிசமாகவே இருக்கட்டும், இவர்கள் இருப்பது உயராய்வுத்தளத்தில் . இவர்கள் அதை எதிர்கொள்ளவேண்டியது ஆய்வுமுறைமை சார்ந்து வாதங்களின் வழியாகத்தான்.

1

இர்ஃபான் ஹபீப்

 

எனக்கு ரொமீலா தாப்பர் ஒரு குறைகுடம் என்னும் எண்ணம் இல்லை – அவர் ஒரு திறமையான தகவல்தொகுப்பாளர் மட்டுமே.அதில் சர்வதேச ஆய்வுநெறி எதையும் அவர் பேணுவதுமில்லை. அதுசார்ந்த எந்த வினாவையும் அவர் எதிர்கொள்வதில்லை. சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களில் உள்ள இடதுசாரிகளுடன் உள்ள ஒரு தொடர்புவலையே அவர் தொடர்ந்து செயல்படுவதற்கான ஆதாரம்

இக்கட்டுரையில் ரொமிலா தாப்பர் நடந்துகொண்டதை பல ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நானும் கண்டிருக்கிறேன்.  “தொல்லியல்சான்றுகள்தானே முதன்மையானவை, அவற்றைக்கொண்டுதானே இலக்கியச்சான்றுகளை விளக்கவேண்டும், நீங்கள் இலக்கியச்சான்றுகளிலிருந்து ஊகங்களை முன்வைத்து நேரடியாக முடிவுகளுக்குச் சென்று அதற்கேற்ற தொல்லியல்சான்றுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறீர்கள் அல்லவா? இது முறைமைகளுக்கு எதிரானது அல்லவா?’ என்று ஒரு மாணவர் கேட்டார். நம்ப மாட்டீர்கள், அவர் கிட்டத்தட்ட வெளியே தள்ளப்பட்டார்

ஒத்திசைவு ராமசாமி

 

ஆனாலும் ரொமீலா, பணிக்கர் வகையறாக்களை மாபெரும் வரலாற்றாய்வாளர்களாகக் காட்டுபவை இரண்டே. ஒன்று, அவர்களின் துல்லியமான கலைச்சொற்களும், கோட்பாட்டுநடையும், நவீனத்தேய்வழக்குகளும். இரண்டு, அவர்கள் தங்களுக்கு மறுதரப்பாக எப்போதுமே வேதகாலத்தில் விமானம் இருந்தது, யாக்ஞவால்கியர் சார்பியல்கோட்பாட்டைப்பேசினார் என்றவகையில் பேசிக்கொண்டிருக்கும் அசடுகளைத்தான் முன்னிறுத்தினர்

ராமசாமி அவர்களின் இக்குறிப்பு மிக முக்கியமான ஒன்று

 

வரலாற்றாய்வின் வீழ்ச்சி

 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/86484