தினமலர் – 13:அரசியலின் இளிப்பு

Tamil_News_large_1481446

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

கோமாளிகளைப்பற்றிய கட்டுரை வாசித்தேன். என் நினைவிலே பல கோமாளிகள் கடந்துசென்றார்கள். முக்கியமாக ஜனதாள அரசை காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு கவிழ்த்த ராஜ்நாராயணன். பிறகு சுப்ரமணியம் சுவாமி. சுவாமி அக்னிவேஷ் என்று ஒரு கோமாளி. சமீபகாலமாக லல்லுப்பிரசாத்

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஓர் இயக்கமே கோமாளித்தனமாக இருக்கமுடியும் என்றால் திராவிடக்கட்சிகள்தான். மேடையில் வெறும் கிண்டலையும் கேலியையும் மட்டுமே சொல்லி அவர்கள் ஆட்சியைப்பிடித்தார்கள்

நல்ல கட்டுரை. நன்றி

அருணாச்சலம்

புதுக்கோட்டை

***

இன்றைய தினமலர் கட்டுரை பார்த்த பின் தோன்றும் எண்ணம் என்னை ஏமாளி ஆக்க பல காரிய கோமாளிகள் எப்போதும் துடிப்புடன் இருக்கிறார்கள்.

இந்த விவாத நாடகம் மேற்கத்திய இறக்குமதியே. இருப்பினும் அதை அடுத்த பரிணாம நிலைக்கு கொண்டு சென்ற பெருமை நமக்கு உண்டு.
பலமுறை Arnab this is not fair you don’t allow me to express என்று கோவபட்ட முன்னாள் இன்னாள் மத்திய அமைச்சர்கள் மீண்டும் மக்கள் முன் தோன்றி கடும் சேவை செய்ய தவறுவதில்லை.

எனக்கு வயலும் வாழ்வும், ஒளியும் ஒலியும் காலங்கள் உண்மையாக தோன்றுகிறது.

காலப்போக்கில் நாம் விரும்பும் நிகழ்ச்சி மாறி திணிப்பை விரும்பும் சூழல். ஆனால் அதுவே ஒரு மாற்றம் கொண்டு வந்து விட்டது. தெருமுனை கூட்டங்கள் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. அது தொலைக்காட்சியின் பலன்.

வரும் காலங்களில் இது முற்றிலும் சலித்து போகும் என்பது நிதர்சனம். மாற்றம் ஒன்றே மாறாதது.

நடராஜன்

***

ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம்,

தங்களின் இன்றைய தேதியிட்ட (31.03.2016) தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள ஜனநாயக சோதனை சாலையில் என்ற கட்டுரையை வாசித்தேன். மிகவும் பயனுள்ள கருத்துகளை இன்றைய இளம் வாக்காளர்களுக்கு தந்துள்ளீர்கள். நன்றி.

குறிப்பாக ஒரு தேசம் என்பது மதமோ, இனமோ, மொழியோ சாராமல் நிலப்பரப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். எனக்கு தெரிந்த வகையில் வேற்றுமையில் ஒற்றுமை அதுதான் நம் இந்திய தேசம் என்பதில் வலுவான நம்பிக்கை கொண்டவன் நான். தங்களின் வரிகளில் இதே கருத்தை கண்ணுற்று மனமகிழ்ந்தேன்.

என்றும் அன்புடன்,

அ. உதயச்சந்திரன்,

நெட்டப்பாக்கம், புதுச்சேரி

***

தினமலர் கட்டுரை இணைப்புக்கள்

13-அரசியலின் இளிப்பு

12-வாக்காளராக வயதுக்கு வருதல்

11-உறிஞ்சும் பூச்சிப்படை

10-நமது செவியின்மை

9-ஊழலின் அடித்தளம்

8-யாருடைய கூலி பெறுகிறார்கள்?

7-வயிற்றைப்பற்றிப்பேசுங்கள்

6-ஏன் கத்துகிறார்கள்?

5-பேச்சுரிமை எதுவரை?

4-ஜனநாயகம் எதற்காக?

3-குற்றவாளிகள் யார்?

2-தனிமனிதனின் அடையாளக்கொடி

1-ஜனநாயக ஒழுக்கம்

முந்தைய கட்டுரைஇனியவை திரும்பல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8