தினமலர் – 10: நமது செவியின்மை கடிதங்கள்

 

Tamil_News_large_1481446

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

நமது செவியில்லாமை  முக்கியமான கட்டுரை.

இப்படி யோசிக்கவே இல்லையே என்று சிந்திக்கவைத்தது.

நாம் அரசியலை கவனிப்பதே கிடையாது. ஆகவே அரசியல் இப்படி ஆகிவிட்டது என்பது உண்மை

செல்லப்பாண்டியன்

***

கட்டுரை ஆசிரியா் திரு.ஜெயமோஹன் அவா்களுக்கு,

வணக்கம்!

ஒன்பதாம் அத்தியாயத்தில் ஊழலின் அடித்தளம், கட்டுரையை படித்தேன். ஊழலின் ஆணிவேரை பிடித்து ஆராய்ந்து அக்கு வேறாக ஆணி வேறாக பிய்த்து மென்மையாக எழுதியுள்ளீா்கள். அத்தனை மக்களின் நல திட்டங்களையும் சுரண்டி இல்லாமல் ஆக்குகிறார்கள். இவா்களே நவீன ஜனநாயகத்தின் எதிரிகள் அதிகாரிகளே..!

உங்கள் சிந்தனையில் சிறகடிக்கும் உண்மைகள் பயனுள்ளவை.எத்தனை போ் இதை வாசிக்கபோகிறார்கள்… உணரப்போகிறார்கள்.!

தொ.ச.சுகுமாறன்.

வேலூா்.9.

***

ஊழலின் அடித்தளம் வாசித்த போது அதன் வரலாறு சற்று விளங்குகிறது. ஆக அதற்கான உரம் ஆங்கில காலத்தில் வலுவாக போடப்பட்டி விடுத்தது. இன்று நாம் ஜடமாய் நிற்பது அதன் பரிணாம வளர்ச்சியை பார்த்து தான். சம்பாத்தியத்தின் மேன்மை நிலையே சம கால ஊழல். இருப்பினும் இன்று கிடைக்கும் கல்வி மற்றும் தகவல்கள் அது என் பணம் என்ற விழிப்புணர்வைகொண்டு வந்திருக்கிறது.

எனக்கான கப்பம் கட்டி விட்டு மீதிருந்த வளத்தை நீ எடுத்து கொள் என்பதின் அடுத்த கட்டமான எனக்கான கப்பத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்பதே இன்றைய நிலை. விஞ்ஞானபூர்வமாக  கொள்ளை என்பது ஆங்கில ஆட்சியில் ஆரம்பித்து விட்டது.

அதிகார வர்க்கம் எப்பேர்பட்ட ஆளையும் வளைக்க வல்லது. அந்த நிலை மாற்றும் திறன் கொண்ட சிறு குழு போதும் மக்கள் பிரதிநிதிகளாக . மாற்றம் சாத்தியம்.

நடராஜன்.

***

6ஆவது நாளாக இன்றும் படித்தேன் தேர்தல் களத்தில் உங்களின் ”ஏன் கத்துகிறார்கள்”.முந்தய 5 பதிவுகளைவிடவும் எனக்கு இது மிகவும் பிடித்தது. மிக மிக சரியனதை சொல்லி இருக்கிறீர்கள். உங்களின் இந்த தொடர் அனைத்தயுமே இளம்/முதல் வாக்கு அளிக்கப்போகும் தலைமுறைக்கு ஒரு புத்தகமாகவே அளிக்கலாம். மற்றவர்களை திருத்த முடியாவிட்டாலும் இனி வரும் இளைஞர்களை திருத்தலாமே

அன்புடன்

லோகமாதேவி

தினமலர் கட்டுரை இணைப்புகள்

10-நமது செவியின்மை

9-ஊழலின் அடித்தளம்

8-யாருடைய கூலி பெறுகிறார்கள்?

7-வயிற்றைப்பற்றிப்பேசுங்கள்

6-ஏன் கத்துகிறார்கள்?

5-பேச்சுரிமை எதுவரை?

4-ஜனநாயகம் எதற்காக?

3-குற்றவாளிகள் யார்?

2-தனிமனிதனின் அடையாளக்கொடி

1-ஜனநாயக ஒழுக்கம்

முந்தைய கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோவை -வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல்