ஜனநாயக சோதனை சாலையில் – 4:ஜனநாயகம் எதற்காக?
மிக்க நன்றி. தினமலரில் இந்த கட்டுரையை எழுதியதிற்கு மிக்க நன்றி. படித்துவிட்டு கண்களில் நீர் பனித்தது. ஏன், எதற்கு, எதனால் என எதுவும் தெரியவில்லை. காரணத்தை கண்டுபிடிக்க நான் மிகவும் மெனெக்கெடவும் இல்லை. மிக அருமையான அவசியமான கட்டுரை இது. நன்றி.
நன்றியுடன்
அருள்
***
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
இன்றைய ‘தினமலர்’கட்டுரையில் நமது பேச்சுரிமையின் எல்லைகளை தெள்ளத்தெளிவாக வரையறை செய்துள்ளீர்கள். முத்தாய்ப்பாக இப்படி எழுதி உள்ளீர்கள்.
“இன்று இந்தியாவில் பேச்சுரிமை, கருத்துரிமை என்பது இந்தியாவை அழிப்பதற்கான பேச்சுகளை பேசும் உரிமை என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது, பேச்சுரிமையை நமக்களித்த முன்னோடிகளுக்கு மிகப்பெரிய அவமதிப்பு அன்றி வேறல்ல. பொறுப்பற்ற உரிமை என்பது போல அழிவை அளிப்பது வேறொன்றும் இல்லை.”
இதை ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் போன்றவர்களும், அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் என்று தான் உணர்வார்களோ? தெரியவில்லை.
அன்புடன்,
அ .சேஷகிரி.
***
அன்புள்ள ஜெயமோகன்,
24.03.16 தேதியிட்ட தினமலர் – தேர்தல் களத்தில் ‘’பேச்சுரிமை எதுவரை?’’ கட்டுரை அருமை. ‘இந்த சுதந்திரம் நமக்கு நமது அரசியல் முன்னோடிகளால் அளிக்கப்பட்டது. எந்த சுதந்திரமும் ஒரு பெரிய பொறுப்பும் கூட…..’ என்ற பத்தி நிதர்சனமான உண்மை. இணையம் தவிர அச்சு ஊடகங்களிலும் (தினசரி, வார, மாத இதழ்கள்) உங்கள் எழுத்துக்களை நிறைய எழுத வேண்டுகிறேன். இக்கட்டுரைகள் நிறைய பேர்களை அடையவேண்டும் என்பது என் அவா !
இதற்கு இடையில் ஒரு நெடுநாள் ஆசை. திரு.அசோகமித்திரன் அவர்களின் இலக்கிய பங்களிப்பிற்காக “ஞானபீடம்’’ கிடைக்க வேண்டுவோமாக !
ரவிக்குமார் கேசவன்
***
தினமலர் கட்டுரை இணைப்புக்கள்