தினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை? கடிதங்கள்-1

Tamil_News_large_1481446

தினமலர் பேச்சுரிமை பற்றிய கட்டுரை கண்டேன்.

நான் பிறந்தது வளர்ந்த பண்பாடு அளித்த அதே சுதந்திரம் தேசமும் அளிக்கிறது. ஆனால் மேற்கத்திய, அமெரிக்க சுதந்திரம் கருத்து மற்றும் உரிமை சார்ந்தது. அங்கே பாதுகாப்பு மட்டுமே அந்த வகையில் பிரதானம். இங்கு கட்டற்ற சுதந்திரம் பொதுவாக குடிமகனுக்கு இல்லை. ஆனால் சமூகத்தில் ஒரு சாராருக்கு உண்டு. இது கிடைத்த சுதந்திரம் பயன்பாட்டு தோல்வி. ஆனால் மேற்கில் அவ்வாறு இல்லை.

நந்தவனத்தில் ஒரு ஆண்டி போட்டு உடைத்த வரலாறு. ஆனாலும் மாறும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நாடு மீண்டும் எழுச்சி பெறும். அத்தனை மகத்தானது இந்த தேசம்.

நடராஜன்

***

“ஜன நாயக ஒழுக்கம்” அருமையான கட்டுரைத் தொடர்.மேலை நாடுகளில் தனி மனிதர்களிடம் ஒழுக்கக் குறைபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் தலைவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருப்பார்கள். தமிழ் நாட்டில் அது அப்படியே தலைகீழாக இருப்பது ஒரு வியப்பான விபரீதம். இங்கே எளிய மனிதர்களிலேயே கூட பண்பாளர்கள் உண்டு. ஆனால் தலைவர்கள்தான் குணக்கேடுகள் மலிந்தவர்கள். பொது வாழ்வில் நேர்மையையும் அறத்தையும் வலியுறுத்தும் கட்டுரைத் தொடர். ஜனநாயகத்தின் பயன் என்ன, சுதந்திரத்தின் பயன் என்ன அற்புதமான தலைவர்களை பெற்றிருந்த நாம் இன்று சீரழிந்து போனதற்கு யார் காரணம் என்பது பற்றியெல்லாம் நிதானமாக பொறுப்பாக எழுதப்பட்ட தொடர்.

அதுவும் ஒரு வெகுஜன நாளிதழில் வெளியாகும்போது லட்சக்கணக்கான வாசகர்களின் மனதில் நிச்சயம் தெளிவை உண்டாக்கும் .இது உருவாக்கும் அதிர்வலைகள் பெருகியவாறே செல்லும்.உற்சாகமாக இருக்கிறது

ஜெ.சாந்தமூர்த்தி

மன்னார்குடி

***

அன்புடன் ஜயமோஹன் அவர்களுக்கு,

ஆங்கிலேயர் ஆட்சி நமக்கு பஞ்சத்தை மட்டும் தரவில்லை, திட்டமிட்டு நம்முடைய பாரம்பரியமாக நம் முன்னோர்கள் வளர்த்த சமூக அறிவை திட்டமிட்டு சிதைத்தனர்.  பின்னரே அவர்களால் நம்மை அடிமை கொள்ள முடிந்தது.

அதனாலேயே நாம் தற்போதைய இழி நிலையை அடைந்துள்ளோம். இதை பற்றியுமான தெளிவை நம் சமூகத்தில் உருவாக்க வேண்டிய அவசியம் மற்றும் நம் பாரம்பரிய அறிவை மீண்டும் நிலை நிறுத்த வேண்டிய கடமையும் நம் முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும்.

என்றென்றும் அன்புடன்,

Gowri manohari

முந்தைய கட்டுரைவேளாண்மை – இயற்கையும் செயற்கையும்
அடுத்த கட்டுரைதினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை? கடிதங்கள்-2