அன்புள்ள அய்யா
இன்றைய தினமலர் கட்டுரையின் உள்ளடக்கம் மிகவும் ஆழமானது. சுதந்திரத்தால் என்ன கிடைத்தது என்று எப்போதுமே வகுப்பில் பையன்கள் கேட்பதுண்டு. நானும் பலவகையிலே பதில் சொல்வேன். இத்தனை ஆணித்தரமான ஒரு பதிலை என் அறிவிலே எவரும் சொன்னதில்லை. வரலாறு சார்ந்த பதில் மறுக்கமுடியாத பதில் இது. இதற்குமேல் ஒருவரால் மாறுபட்டுச் சொல்லவே முடியாது
அன்புச்செல்வம்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
இன்றைய தினமலர் கட்டுரை ஆழமானது. இந்தியாவின் தேர்தல்கள் வரும்போதெல்லாம் இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகம் என்றும் சுதந்திரப்போராட்டமே போலியானது என்றும் காந்தி நேருவெல்லாம் மோசடிக்காரர்கள் என்றும் ஒரு கூட்டம் கிளம்பி வருவதுண்டு. அவர்களுக்கான நெத்தியடி பதில்
அரசு சுப்ரமணியம்
***
அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு,
தினமலரில் உங்கள் கட்டுரைகளை நாள்தோறும் விரும்பி வாசிக்கிறேன். தேர்தல் வம்புகளைப்பற்றி ஒன்றுமே எழுதாமல், கட்சிசார்ந்து ஒன்றுமே சொல்லாமல், ஆனால் தேர்தல்காலத்துக்கு ஏற்ற சிந்தனைகளைச் சொல்லிவருகிறீர்கள்.
வாழ்த்துக்கள்
உமாமகேஸ்வரன்