அன்புள்ள ஜெ
சற்று முன் நான் உங்கள் லோஸா பற்றிய பதிவை வாசித்தேன். அதில் லோஸா சிறந்த எழுத்தாளர் அல்ல என்று சொல்லியிருந்தீர்கள். ஏன் என்று சொல்ல முடியுமா?
அர்விந்த்
அன்புள்ள அர்விந்த்
கட்டுரை அல்லது குறிப்பு வெளியாகி மூன்றே நிமிடங்களில் அரட்டைப்பெட்டிக்கு வந்து கேள்வி கேட்டுவிட்டீர்கள். அதன் விளைவே இந்த குழப்பம். நான் வாசித்தது அவரது இரண்டு நாவல்கள் மட்டுமே. அதுவும் ஒன்று பத்துபதினைந்து வருடம் முன்பு. ஆகவே சுத்தமாக ஞாபகத்தில் இல்லை. ஒரு நாவல் ஒருதலைவரை கொல்வதைப்பற்றியது. சில வருடங்களுக்கு முன்னர் வாசித்தது புகைமூட்டமாக நினைவிருக்கிறது. அதைவைத்து என்ன சொல்வது? அவரைப்பற்றி ஒரு மதிப்பீட்டுக்கருத்து சொல்லும் அளவுக்கு வாசித்தது இல்லை என்றே சொல்கிறேன்.
உலக இலக்கியத்தின் முக்கியமான ஒருவரைப்பற்றி கருத்துச்சொல்ல அவரது குறிப்பிடத்தக்க எல்லா ஆக்கங்களையும் வாசித்திருக்கவேண்டும். அவ்வாறு அனைவரையும் வாசிப்பது எவராலும் இயலாது. எல்லாரையும் ஒருவர் அப்படி விரிவாக வாசிக்கிறார் என்றால் அவருக்குச் சுயரசனையோ தேடலோ இல்லை என்று பொருள். நான் ஒரு சிலரையே முழுமையாக பின் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். அவர்கள் ’என்’ எழுத்தாளர்கள். அவர்களைப்பற்றியே நான் பேசமுடியும். மற்றபடி இதழாளர்கள் சில குறிப்புகளை எழுதலாம்.
லோசா அப்படி ’என்’ எழுத்தாளர் அல்ல என்பதை நீங்களே காணலாம். அதற்குப்பொருள் அவர் நல்லஎ ழுத்தாளர் அல்ல என்பதல்ல. ஏதோ ஒருவகையில் மதம்-தத்துவம்-ஆன்மீகம் என தொட்டுக்கொண்ட எழுத்தாளர்களை மட்டுமே என்னால் முழுமையாக ஈடுபட்டு வாசிக்க முடிந்திருக்கிறது. லோஸா அரசியல் எழுத்தாளர். அவரை அவ்வகையில் ஈர்க்கப்பட்டு முழுக்க ஆழ்ந்து வாசித்த எவரேனும் இருந்தால் எழுதலாம். நான் அல்ல.
ஜெ
Dear Je,
I am sure you have heard of the Nobel for Mario Vargas Llosa. Here’s a link to an essay he wrote about Fiction. I have appended the link. I have also copied/pasted the essay if the link asks for a Nytimes account.
Cheers
Siva
http://www.nytimes.com/books/98/06/28/specials/llosa-art.html?_r=2