பயணம் – பெண்கள்- கடிதங்கள்

DSC_1866
அன்புள்ள  ஜெ
 உங்களின் நாவல்களின் மூலமும் , கட்டுரைகளின்  வாசிப்பின் வாயிலாகவும் தொடர்ந்து உங்களின் அருகாமயிலேயே  இருக்கிறோம் அகவே உங்களை அன்னியமாக உணர முடியவில்லை. எனது  எல்லா கேள்விகளுக்கும்  உங்களின் தளத்தில் , ஏதோ  ஒரு வடிவில்  அது கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ  , அவ்வளவு ஏன்,  விமர்சனக் கட்டுரையில் கூட  பதில் கிடைத்து விடும்.உங்களின்,  பெண்களுக்கான  இலக்கிய சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி , அதுவும் எங்களுரிலேயே  நடக்க இருப்பதால்  இரட்டிப்பு ஆர்வம் . அதில்  தவறாமல் கலந்து கொள்ள  என்ன செய்யவேண்டும் . மேலும் உடனடியாக பதிவு முடிந்து விடுவதால்  என் போன்றவர்கள் என்ன  செய்ய வேண்டும் . காரணம் மாலை மட்டுமே உங்களின் தளத்தை பார்வையிட முடிகிறது. (
நன்றி
ஹேமா
அன்புள்ள ஹேமா
அடுத்த சந்திப்பு அறிவிக்கப்படும்போது உங்களுக்கு நேரடியாகவே எழுதிவிடுகிறேன்
ஜெ
அன்புள்ள ஜே எம்
கல்லூரியின் வசந்த விடுமுறை 10 நாட்கள்.  நாங்கள் Greece நாடு சென்றோம்.  என்னால் வார்த்தை கொண்டு விவரிக்க முடியவில்லை. கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு நாடு.  தவற விடாதீர்கள்.
பாத்து நாட்களாக உங்கள் ப்ளாக் வாசிக்கவில்லை.  இன்று முதல் மீண்டும் தொடரும்.
அன்புடன்
சிவா
அன்புள்ள சிவா
இந்தியாவில் ஒரு பெண் கொல்லிமலைச் சந்திப்பு வருவதற்கே யோசித்து தயங்கி கோவைக்கு வருவதற்கே தீவிரமாகத் திட்டமிடுகிறார்.
அமெரிக்காவில் இருக்கிறீர்கள். இந்தியப்பெண்கள் அமெரிக்கா வந்தால் மீண்டும் ஊர்திரும்ப விரும்புவதில்லை. ஏன் என தெரிகிறது
ஜெ
ஜெ,இன்றைய “பெண்களும் சந்திப்புகளும் சிக்கல்களும்” பார்த்த பிறகு, எனக்குச் சிறிது வருத்தமாக இருந்தது. கொல்லிமலையைப் பொறுத்தவரை தேவையானால் 5 பெண்கள் வரை தனியாக தங்கவைக்க வசதி இருக்கிறது. சந்திப்பு நாட்களில் கோடையின் தாக்கம் ஆரம்பம் ஆகி இருக்கும். எனவே குளிர் ஒரு பிரச்னை அல்ல. சுமார் 70 வளைவுகள் கொண்ட மலைப் பாதை ஆதலால், சிலருக்குச் சற்று சிரமமாக இருக்கலாம். இது பொதுவாக எல்லோருக்குமான பிரச்னை தான். மற்றபடி பெண்கள் தனியாக நாமக்கல் வரை வரும் இரவு பயணம், நாமக்கல்லில் சிறிது ஓய்வு மற்றும் சில அடிப்படை தேவைகளுக்கு கூடுதல் வசதி போன்ற ஏற்பாடுகளுக்கு சற்று அதிக சிரத்தை தேவைப்படும். அவ்வளவுதான்.

ஆனால் எல்லாம் இறுதி செய்யப்பட்ட பிறகு இப்போது அது சாத்தியமா என தெரியவில்லை.

வாசு

நாமக்கல்

முந்தைய கட்டுரைஆணவக்கொலைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி