கனவில் படுத்திருப்பவன்

1
அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா? நான் சஜீவ். உங்களை ஓஹயோ பௌலிங் கிரீனிலும் கொலம்பஸிலும் சந்தித்திருக்கிறேன் . இப்போது சொந்த ஊர் தக்கலைக்கு  3 வாரம் லீவ் இல் வந்துள்ளேன்.

உங்கள் இணையத்தில் ஆதி கேசவன் பற்றிய பதிவு சில மாதங்களுக்கு முன் மீண்டும் படித்தபோது அந்த கோவிலுக்கு இந்த முறை செல்வதாக முடிவு செய்தேன். சென்ற வாரம் சென்றேன். Amazing Experience . அந்த கோவில் சிலைகளும் ஆதி கேசவனும் வார்த்தையால் சொல்ல முடியாத experience அளித்தது .

நான் வெட்கப்படுகிறேன். தக்கலையில் பிறந்து வளர்ந்து இவ்வளவு பக்கத்தில் இருந்த இந்த மாதிரியான ஒரு பொக்கிஷத்தை இந்நாள் வரையிலும் கவனிக்காததற்க்கு. .

சஞ்சீவ் நாயர்

அன்புள்ள ஜெ
வெண்முரசை நீண்ட நாட்களுக்குப்பிறகு அறிமுகம் செய்துகொண்டேன். எனக்கு அதனுள் செல்வதற்கான மனத்தடைகள் ஏராளமாக இருந்தன. முக்கியமாக என்னால் புராணக்கதைகளை சரியான உணர்வுகளுடன் புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றிலிருந்த சிக்கல் சலிப்பூட்டியது. ஆனாலும் வாசித்துக்கொண்டிருந்தேன்’
சிலநாட்களுக்கு முன் அனந்தபத்மநாபசாமியைச் சென்று பார்த்தேன். அது ஒரு மிகப்பெரிய அனுபவம். பள்ளிகொண்ட விஷ்ணுவை பார்த்தபோது மனம் நடுங்கியது. நான் பக்தன் இல்லை. கடவுள்நம்பிக்கையும் இல்லை. ஒரு பிரம்மாண்டமான கலைப்படைப்பு. ஒரு பெரிய மெட்டஃபர். அதை உணர்ந்ததுமே நான் அத்தனை புராணங்களையும் உனர்ந்துகொண்டேன்
அது ஒரு தொடக்கம். அதன்பிறகு வெண்முகில்நகரத்தில் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருக்கும் அத்தனை தொன்மங்களையும் நுணுக்கமாகப்புரிந்துகொள்ள முடிந்தது. இன்று புராணங்களின் உலகத்துக்குள் சென்றுவிட்டேன்
அது நம்முடைய இன்னர் கான்ஷியஸ்நெஸ் என்று தோன்றுகிறது. அதை நம் மாடர்ன் கான்ஷியஸ்நெஸ் தடுத்துக்கொண்டிருக்கிறது. அதைத்தாண்டிச்சென்றால் நாம் நம் கனவை நேரடியாகவே வாசிக்க ஆரம்பிக்கிறோம்
எஸ் ஆர் சந்திரமௌலி

 

 

முந்தைய கட்டுரைஆதவ் சகோதரிகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமரபை மறுஆக்கம்செய்தல்