கொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு…

 

1

கொல்லிமலைச் சந்திப்புக்கான இடங்கள் ஒரே நாளில் நிறைவுற்றுவிட்டன. சிலமணிநேரங்களில். சென்றமுறை வரவிரும்பி வரமுடியாது போன நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுத்தோம்.

மேலும் தொடர்ந்து நண்பர்கள் அழைத்து அந்தப்படிவத்தை அனுப்பமுடியவில்லை என்று சொல்கிறார்கள். பலர் , குறிப்பாகப் பெண்கள், பயணத்தை ஒரு குறையாகச் சொல்கிறார்கள். ஆகவே மேலும் ஒரு சந்திப்பை கோவையில் நண்பருடைய பண்ணைவீட்டில் வைத்துக்கொள்ளலாமா என்று எண்ணுகிறேன். அனேகமாக ஏப்ரல் முதல்வாரம்.

இன்னொரு சந்திப்பை ஈரட்டியிலும் வைத்துக்கொள்ளலாம் என்னும் எண்ணமிருக்கிறது. ஏற்பாடுகள் குறித்து பேசியபின் அறிவிக்கிறேன். இம்முறை வாய்ப்பு கிடைக்காத நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். சந்திப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைமணி-3
அடுத்த கட்டுரைஈரட்டி புகைப்படங்கள்- கடிதங்கள்