ஈரட்டிச் சிரிப்பு -கடிதங்கள்

 

DSC_2148

அன்பு ஜெயமோகன்,

ஈரட்டிச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்கிற ஏக்கத்தில் இருந்த எனக்கு ஈரட்டிச் சிரிப்பு பதிவு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது. வயிற்று எரிச்சலில் புழுங்கிக் கொண்டிருந்ததால்தான் உடனடியாகக் கடிதம் எழுதவில்லை. ஈரட்டிச் சந்திப்பு குறித்த அறிமுகக் கடித்த்திலேயே யானைக்கு ஆறு தரிசனங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டி இருக்குமோ என  மனம் ’பதைத்திருந்தீர்’கள். அங்கேயே  உங்கள் மனநிலையை நான் புரிந்து கொண்டேன். என்றாலும், ‘செம சூடான’ விவாதங்களில் அது காணாமல் போய்விடுமோ என்று பயந்து கொண்டு இருந்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை. ஈரோடு கிருஷ்ணன் சிரித்தால் வெகு அழகாக இருப்பார்; ஏனோ ஈரட்டியில் அவர் சிரிக்கவில்லை போலும். செல்வேந்திரன் மற்றும் அரங்கசாமி போன்றோரின் சிரிப்பைப் பலமுறை கண்டிருக்கிறேன். நண்பர்.விஜயராகவனின் வெடிச்சிரிப்பை இப்போதுதான் பார்க்கிறேன். ஈரட்டிச்சிரிப்பில் கலந்துகொள்ள முடியவில்லையே எனும் ஏக்கம் வாழ்நாள் முழுக்கத் தொடரும் என்றே நினைக்கிறேன். இதைத் தயைகூர்ந்து நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

சிந்தனை என்றாலே சீரியஸாகத்தான் இருக்க வேண்டும் என்று எவனோ நன்றாகக் கதைகட்டி விட்டிருக்க, அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். ‘நான் சீரியஸா பேசறேன்” என்று வடிவேல் சொல்ல..”ஏன் ஆஸ்பத்திரில முடியாம படுத்திருக்கிறியா” என எதிர்த்தரப்பு கேட்க வடிவேலு முழிப்பார் பாருங்கள், ஒரு முழி. அம்முழிக்கு ஆஸ்கார் கொடுக்கலாம். அக்காட்சி நடைமுறை எதார்த்தத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டி இருக்கும்.

ஒரு மனிதன் சிரித்தாலே அவன் சிந்திக்க மாட்டான், செயல்படமாட்டான் என்பது போன்ற எண்ணங்கள் வர தமிழக அரசியல் அமைப்புகளே காரணம் என்பது என் கருத்து. ”மேடையில் செந்தமிழால் நீட்டி முழக்கிப் பேசுபவனே நல்ல சிந்தனையாளன்” என்பதான தோற்றத்தை அவர்களே தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். நம்மைப் பொறுத்தவரை பேச்சாளன்தான் சிந்தனையாளனாக இருக்க முடியும். அட, தேவுடா!

நான் எழுதும் கடிதங்களைப் பார்க்கும் நண்பர்களில் சிலர், “மாப்ள! கடிதங்களை நீ எழுதறியா.. இல்ல, ஆள் வைச்சு எழுதறியா?” என்று கேட்பார்கள். ஏனென்றால், நடைமுறையில் நான் சிரிப்பில்லாமல் பேசாதவன். செந்தமிழில் அல்லாமல் மக்கள் மொழியான வட்டார வழக்கில் பேசுபவன். அதனால் அவர்களால் என் கடிதங்களை ஒப்புக்கொள்ளவே முடிவதில்லை. அதிலும், பல நண்பர்கள் தமிழ்த்திரைப்படத்தில் கதாநாயகனோடு வரும் நண்பனைப்(நகைச்சுவைக்காக) போன்றே என்னைக் கருதி இருக்கிறார்களாம். எங்கள் பகுதியைச் சேர்ந்த ‘உன்னத’ எழுத்தாளர் ஒருவரும் அதையேதான் சொன்னார். ”தம்பி! நீங்க பேசறத வைச்சு உங்களுக்கு சீரியஸா திங்க் பண்ண வராதுன்னுதான் நினைச்சேன். ஆனா, தீர்க்கமா சிந்திக்கிறீங்க”ன்னு அவர் சொல்லப்போக “இதென்னடா, வம்பா இருக்குன்”னுதான் நினைத்தேன். அரைமணி நேரம் ஒரு இடத்தில் நான் பேசிக்கொண்டிருந்தால், அவ்விடத்தில் என்னையும் மீறி சிரிப்பு முகாமிட்டு விடும். நானறிந்தவரையில், நகைச்சுவையைப்போன்று சூழலை இலகுவாக்கும் காரணி வேறில்லை.

நாடு, இனம், மொழி போன்ற பேதங்களைக் கடந்து மனிதனின் பொது அடையாளமாக நான் பார்ப்பது சிரிப்பையே. சிரிக்கும் மனிதனின் முகத்தில் நான் இயற்கையின் மலர்ச்சியைக் காண்கிறேன். சிரிக்கும்போது ஒருவன் ’சும்மா இருக்கும்’ நிலையை அடைகிறான்; ஆம், சிரிக்கும்போது மட்டுமே அவன் தனக்குள் எவ்விதக் கருத்தையும் கொண்டிருப்பதில்லை. கருத்துக்க்ள் இல்லாத நேரத்தில் மனம் இலேசாகிறது. அவனால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.

திருவிழாக் காலங்ளில் நம் ஒவ்வொருவர் முகத்திலும், வீட்டிலும் நம்மையறியாமல் குடிகொண்டுவிடும் சிரிப்பாலேயே நாம் வாழ்கிறோம். தென்கச்சி சாமிநாதன் சொல்வர் :”சித்த சுவாதினத்துடன் கூடிய பைத்தியகாரத்தனம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். சிரிப்பே ஒரு மனிதனை அந்நிலைக்குத் தகுதியாக்குகிறது”. அவரின் ’இன்று ஒரு தகவல்’ பகுதியைப் பலமுறை கேட்டிருக்கிறேன்; இப்போதும் நேரம் வாய்க்கும்போது கேட்கிறேன். எளிய மனிதர்கள் நவீன சிந்தனைகளுக்கு நகர அவரின் நகைச்சுவையுடனான பேச்சு வழிவகுக்கிறது என்றே நம்புகிறேன். வெறுமனே சிந்தித்துக் கொண்டிருப்பவன் மனிதனாக இருக்க முடியாது எனப் பள்ளிக்காலங்களிலேயே எனக்கு உணர்த்தியவர் அவர்தான். “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் நான் என்றோ தற்கொலை செய்திருப்பேன்” என்று சொன்னபோதே காந்தியை மிக நெருங்கிப் பார்க்க முடிவு செய்தேன். ஆக, சிரிப்பை சிந்தனையைச் சின்னபின்னாபடுத்தி விடும் எதிரியாகக் கருத வேண்டியதில்லை.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

 

அன்புள்ள ஜெயமோகன் ,

ஈரட்டி சிரிப்பு படிக்கும் பொழுது நினைத்து கொண்டேன் ,தங்களின் புனைவு வழியாகவும் ,மேடைப் பேச்சு வழியாகவும் ஜெயமோகன் ஒரு கறாரான ,முரட்டு ஆளுமை என்று உங்களை அனுகுபவர்வர்கள் அதிகம்  ,நான் தங்களை ஏற்காட்டில்  நடந்த இலக்கியக் கூட்டத்தில் கண்டேன் ,ஒருவர் உறங்கிகொண்டிருந்தார் என்பதால் ,அவரை பாதியிலேயே கிளம்பி போக சொன்னதாக நியாபகம் , கூட்டத்தில் எல்லோர் முன்பும் அந்த வார்த்தையை கேட்கும் பொழுது ” அட என்ன இது தனியாக சொல்லி இருக்கலாமே ” என்று தோணியது அதில் சமரசம் இல்லை ,சரியான வழிமுறை தான். ” நீலம்” நாவல் எழுதும் பொழுது ஏற்பட்ட அனுபவத்தை நீங்கள் எழுதிய பொழுது எப்படி இந்த மனிதனால் இப்படி ஒரு செறிவான படைப்பை இப்படி ஒரே மனநிலையில் எழுத முடிகிறது என்று ஆச்சர்யம் கொண்டேன் .இப்பொழுது இந்த ஈரட்டி சிரிப்பை கண்டு நானும் சிரித்து கொண்டிருக்கிறேன் .original.

சிலநாட்களுக்குமுன்புஎன்னுடையஅலுவலகநண்பன்ஒருவன்என்னிடம் “ஏன்எப்பொழுதும்முகத்தைஇறுக்கமாகவைத்துகொண்டுஇருக்கிறாய் ,எல்லோருடனும்கலகலவெனபேசு ” என்றான். சரிதான்ஆனால்எப்படி

சிரிப்பது ?.முக்கியமான கேள்வி ,எப்படி சிரிப்பது .இங்கே நகைச்சுவை என்பது  face book,Whatsup மற்றும் சினிமா மூலமாக வளர்ந்து வருவது “கலாய்ப்பது “வகையறா ,மற்றவரை மட்டம் தட்டி மகிழ்வது.  உடல்மொழியும் ,முகபாவமும் கூட மிகவும் முக்கியம் அந்த வகை இங்கு குறைவு (குறைவு என்பதை விட இல்லை என்பது மிகவும் பொருந்தும்). தெருவில் படுத்திருக்கும் நாயும் ,பூனையும் பார்த்தால் சிரிப்பு வரும் ,மனிதனை பார்த்தால் கோபதோடு “அய்யோ பாவம் ” என்று தான் தோன்றும் .

சிரிப்பதுஎன்பதுஇங்குசில்லறையுடன்தொடர்புகொண்டாகிவிட்டது . Zorba the greek படத்தில்சோர்பவும் ,எழுதாளர்நண்பரும்படகில்செல்லும்பொழுதுZorbaடால்பின்கடலில்இருந்துதுள்ளிகுதிப்பதைகண்டு

சிரித்துதானும்துள்ளிகுதிப்பார் ,நண்பர்அதைஒருபொருட்டாகவேநினைக்காமல்புத்தகம்படிதுகொண்டிருபார் ,அதைபார்த்தzorba ” என்னவகையானமனிதன்நீடால்பினைபார்த்துஎந்தசலனமும்இல்லாமல்இருக்கிறாய்

என்பார் ” யோசித்து பார்க்கும் பொழுது தற்பொழுது உள்ள தலைமுறை அந்த டால்பினோடு செல்பி எடுக்க முனைப்பு காட்டுவார்கள் என்பது உறுதி , முன்னேற்றம் தானே மீண்டும் facebook ,watsup விளம்பரங்கள் .

சரி செல்பி எடுக்கும் பொழுதாவது சிரிகிறர்களே ,சந்தோஷம் .

வால்பாறையில் காட்டெருமையை  பார்த்தபொழுது ஏற்பட்ட அனுபவம் ….இப்படி இருந்திருக்கலாம்….உண்மையும் கற்பனையும் கலந்த ஒன்று  .

இப்படிதான் ஒருவர் காட்டெருமையுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார் ,

காட்டெருமை தன்னுடைய முதுகிற்கு பின்னால் இருந்து சிரிப்பது போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.எத்தனை நாளைக்கு தான் நானும் இந்த காட்டுக்குளையே திரிவது என்று காட்டெருமையும்  சிரித்து கொண்டு முன்வந்தது  ,ஆனால் செல்பி எடுக்கும் நண்பருக்கு அந்த முன்னேற்றம் பிடிக்கவில்லை ,

 

ஒரு சின்ன உரையாடல் ..

 

அந்த ஒருவர் :   “அட எருமையே அங்கேயே நில்லு ,நான் Zoom செஞ்சு செல்பி எடுத்துக்கிறேன் ” என்றார் .

 

காட்டெருமை:      ஐயோ ! அது நல்ல இல்லே நாம நல்ல தோழனாகும்  .

 

அந்த ஒருவர் :   யாரு நீயா ?.

 

காட்டெருமை      :இல்லையா ?.

 

அந்த ஒருவர் :   இல்ல நீ காட்டெருமை .

 

காட்டெருமை:     எதற்கு அப்புறம் செல்பி எடுக்கிற?

 

அந்த ஒருவர் :   “பாகுபலிலே ராணா ,காட்டெருமை அடக்கி காட்டுவாரே ”

 

காட்டெருமை:      “அவரு அடகினது வெறும் க்ராபிச்சகும் (graphics) ”

 

அந்த ஒருவர் :   “ம்ம்ம் ..சரிதான் …நீயும் அப்படித்தான்,அங்கேயே நில்லு கிட்டவராதே  ”

 

காட்டெருமை:     “என்னை கண்டு ஏன் பயபடுற ”

 

அந்த ஒருவர் :   “பயம் ஒண்ணும் இல்ல ”

 

காட்டெருமை:     “அப்ப எருமையோடு எதுக்கு உனக்கு செல்பி ”

 

அந்த ஒருவர் :   “நீ காட்டெருமை சாதாரண எருமை இல்ல  ,எனக்கு பின்னாலே நில்லு ,அதுவும் தூரமா ”

 

காட்டெருமை:     “ஏன் தூரமா நிக்கணும் ”

 

அந்த ஒருவர் :   “ஒரிஜினல் தூரமா தான் நிக்கணும் ”

 

காட்டெருமை:     “சரிதான் ,நான் போயி அந்த மலை உச்சியிலே நிக்கிறேன் ,அது தான் என்னுடைய இடம் ”

 

நண்பர் பிறகு ஆழியார் வந்து பொம்மையாக இருந்த காட்டெருமையுடன் அருகில் இருந்து செல்பி எடுத்து கொண்டார் .

 

சிரிப்பிலும் போலிகளை தான் பார்க்க கிடைக்கிறது ,நல்லவேளை எனது எட்டு மாதம் நிறைந்த மகன் என்னை காப்பாற்றுகிறான்.

முரளி சித்தன்

 

 

அன்புள்ள ஜெமோ

 

நல்லவேலை கவிதா சிரிக்கத்தெரிந்தவர். அதனால்தான் அவரை கலாய்க்கிறீர்களா?

 

சித்ரா

 

அன்புள்ள சித்ரா

 

ஆம். கவிதா சொர்ணவல்லி சிரிக்கத்தெரிந்தவர். லீனா மணிமேகலை சிரிக்கத்தெரிந்தவர். அவர்களைத்தான் கேலிசெய்யமுடியும். அதுதான் தர்மம்

 

சீரியஸாக எடுத்துக்கொள்பவர்களை கேலிசெய்யக்கூடாது. அது வன்முறை

 

ஜெ

முந்தைய கட்டுரைஅண்ணாச்சி – 3
அடுத்த கட்டுரைவானவன் மாதேவி இயலிசை வல்லபி- இல்லத்திறப்புவிழா