நீலகண்டன் அரவிந்தன்

பொதுவாக தமிழில் நமக்கு விவாதங்கள் நிகழ்த்திக்கொள்ள தெரிவதில்லை. ஒருவகையான தார்மீகக்கோபத்தை பாவலா செய்துவிட்டு வசைபாடுவதை மட்டுமே செய்தால்போதும் என நினைக்கிறோம். மாற்றுத்தரப்பை மட்டம் தட்டுவதும், அவர்களின் வாதங்களை திரிப்பதும், அவர்களின் மையக்கருத்தை விட்டுவிட்டு எளிய பிழைகளில் இருந்து மேலே பேச ஆரம்பிப்பதும் நம் வழக்கம். சிற்றிதழ்ச்சூழலில் இருந்து இன்று இணையம் வரை இது நீள்கிறது.

நம் சூழலில் இந்த மனநிலையை உருவாக்கி வளர்த்தது திராவிட இயக்கமே என்பது என் மனப்பதிவு. காரணம் திராவிட இயக்கத்துக்கு அவர்களுக்கென உலகப்பார்வையோ ஆய்வடிப்படைகளோ இல்லை. அவர்களால் எந்த விஷயம் மீதும் காழ்ப்பை மட்டுமே கொட்ட முடியும். அவர்களின் வெற்றி தெளிவான உலகப்பார்வையும் ஆய்வுமுறைமைகளும் கொண்ட மார்க்ஸியர்களையும் அவர்களின் பாதையை தேர்வுசெய்ய வைத்திருக்கிறது.

ஆனால் புதியதலைமுறையில் சிலரது வாசிப்பு விரிவும் விவாதங்களில் பொது ஒழுங்குகளை பேணும் நேர்த்தியும் என்னைக் கவர்கின்றன. நீலகண்டன் அரவிந்தன் அவர்களில் ஒருவர். அவருக்கு முற்றிலும் எதிரான கோணத்தில் சிந்திக்கும் அ.முத்துகிருஷ்ணன் இன்னொருவர். இவர்களிடம் இவர்கள் சொல்லும் அனைத்தையும் முழுமையாக மறுத்து நட்புடன் விவாதிக்க முடிகிறது என்பதே ஆச்சரியமளிப்பது. வரும் தலைமுறை மீது ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்குவது.

நீலகண்டன் அரவிந்தனின் பத்தி ஒன்று பா.ராகவன் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் தமிழ் பேப்பர் இணையதளத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது. அவரது தகவலறிவையும் வாதங்களின் நேர்த்தியையும் அவற்றினூடாக வெளிவரும் வரலாற்றுக் கோணத்தையும் அதன் மூலம் அறியலாம். இவ்விதழில் அவர் கஜினிமுகம்மது குறித்து எழுதியிருக்கும் கட்டுரைக் குறிப்பிடத் தக்கது

http://www.tamilpaper.net/?p=381

முந்தைய கட்டுரைபோலிக்கறுப்பு
அடுத்த கட்டுரைகடிதங்கள்