’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’

f

 

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

வெண்முரசின் பத்தாவது நாவலை உடனே தொடங்கிவிடமுடியுமெனத் தோன்றுகிறது. ஏனென்றால் அது இயல்பாகவே வெய்யோனின் கதைநீட்சி கொண்டிருக்கிறது. பெண் முன் ஆண் விழுந்த அவைக்களம் முதல் ஆண்களின் அவையில் பெண் எழும் அவைக்களம் வரையிலான ஒரு கதை என ஒரு முன்வரைவு மனதில் இருக்கிறது. ஆனால் அது எந்தவகையில் மேலே செல்லப்போகிறது என்பதை எழுதிப்பார்த்தால் மட்டுமே தெரியும்.

ஒரு இருபதுநாட்கள் ஓய்வெடுத்துவிட்டு மார்ச் 26 அன்று மீண்டும் தொடங்கலாமென நினைக்கிறேன். நாவலுக்குப் பெயர் மட்டும் இப்போது சூட்டியிருக்கிறேன். ‘பன்னிரு படைக்களம்’. இது பன்னிருகளம் கொண்ட பகடையின் கதை. ஒருவகையில் மகாபாரதமே பிரம்மாண்டமான ஒரு பகடைக்களம்தான்.

ஜெயமோகன்

 

முந்தைய கட்டுரைஈரட்டி புகைப்படங்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநகைச்சுவை பற்றி-கடிதங்கள்