எழில்வரதன்

அன்பின் ஜெமோ

தங்களின் ‘பிரசுரம்’ இடுகையே இந்த கடிதத்திற்கு காரணம்.
எழில்வரதனை வாசித்திருப்பீர்கள். அவருக்குரிய கவனம் இன்னும் கிடைக்கப் பெறவில்லையென்றே நினைக்கிறேன். (என்னால் ஆகப்பெற்றது அவரின் கதைகளை இணையத்தில் எளிதில் கிடைக்கும்படி சேமித்துள்ளதுதான்) – http://selections.wordpress.com/2009/04/16/எழில்வரதன்/
அவரைப்பற்றி தங்களின் அவதானம் என்ன?

அன்புடன்
வெங்கட்ரமணன்

அன்புள்ள வெங்கடரமணன்,

எழில்வரதனின் கதைகளை வாசித்திருக்கிறேன். வெறும் சுவாரஸ்யத்தை மட்டுமே இலக்காக கொண்ட எழுத்து. அவருக்கு ஒரு வணிக எழுத்தாளராக அவருக்கான இடம் கிடைத்திருக்கிறது. இலக்கிய எல்லைக்குள் அவர் வர வேண்டுமென்றால் வெகு தூரம் வர வேண்டும். ஆனால் இனி அவர் தன்னை உடைத்து வார்த்துக் கொண்டு இங்கே வருவது எளிதும் அல்ல. இன்று எவ்வகையிலும் பொருட்படுத்தக்க எழுத்து அல்ல அவரது என்றே சொல்வேன். செயற்கையான ஒருநடை, ஆழமில்லாத வரட்டு நகைச்சுவை… இந்தவகை எழுத்துக்கு தமிழில் கல்கி, தேவன், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் என்பதே உரிய வரிசை.

கிட்டத்தட்ட இதே தளத்தில்தான் பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார் எழுதி வருகிறார்கள். அவர்களின் சில கதைகளிலாவது ஆத்மார்த்தமான ஒரு முயற்சி இருந்தது. இவருக்கு ஆத்மார்த்தம் என்ற அம்சமே பரிச்சயமில்லை போலும்.

ஜெ

முந்தைய கட்டுரைகிறிஸ்து,கிருஷ்ணன்,பகுத்தறிவு…
அடுத்த கட்டுரைநக்கலும் நாஞ்சிலும்