இயற்கைவேளாண்மை முன்பும் பின்பும்

ஜெ

உங்கள் இரு முரண்பாடுக் குறிப்புகளையும் பார்த்தேன். முரண்பாடே இல்லை. இயற்கைவிவசாயம் செய்து பார்ப்பதற்குமுன், பார்த்தபின் என இரு நிலைகள். சாப்பிடும்முன் ,சாப்பிட்டபின் என்பதுபோல

கடுப்பேற்றவில்லை. நானும் இதே கேஸ்தான். நம்மாழ்வார் அன்றும் இன்றும் என்று ஒரு நல்ல குறிப்பை நானே எழுதமுடியும். ஏழு ஏக்கர். வருடத்திற்கு ஒன்றரைலட்சம் நிகர நட்டம் ஏழில் ஆறு விற்பனைக்கு இருக்கிறது. [அவ்விடமும் அதுதான் என நினைக்கிறேன்]

ஆனால் வெளியே ஆவேசமாகத்தான் பேசுவேன். இயற்கைவிவசாயம் என்பது பரமண்டலத்திலிருக்கும் கர்த்தர்போல. விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள்

எஸ்

அய்யா,

நீர் புலவர். நீரே புலவர். நான் புலவனில்லை. நீரே பார்த்து ஏதாவது போட்டுக்கொடும்

ஜெ