அன்புள்ள நண்பர்களுக்கு,
பலநண்பர்கள் கோரியமைக்கேற்ப புதியவாசகர்களுக்கான 3 ஆவது சந்திப்பு நிகழ்ச்சிகளை முழுமைசெய்துவிட்டோம். இடம் கொல்லி மலை .நாள் 2016 மார்ச் 26, 27 [சனி ஞாயிறு].
கடந்த ஈரோடு மற்றும் ஊட்டி சந்திப்புகளில் பங்கேற்காதவர்களுக்காக இந்த 3 ஆவது புதியவர்கள் சந்திப்ப்பு கொல்லி மலையில் நண்பர் வாசுவின் குடும்ப ஓய்வில்லத்தில் வரும் இரண்டு நாட்கள் நடக்கும்
சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன் முடிவடையும். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். [email protected] என்னும் விலாசத்திற்கு வருகையை உறுதி செய்து அஞ்சலிடவும்.
ஏற்கனவே நண்பர் கிருஷ்ணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் சென்று இடத்தை ஆய்வு செய்துவிட்டு வந்துவிட்டனர்.
-நாமக்கலில் இருந்து நாங்கள் ஏற்பாடு செய்யும் வாகனத்தில்தான் செல்ல முடியும்
-கைபேசி , இணையம் இணைப்புகள் அரிது
– முதல் நாள் இரவில் ஒரு மலை உச்சியில் இரவுணவு, அங்கு செல்ல அனைவருக்கும் ஒரு ட்ராக்டர் ட்ரைலர் டிரைவ்.
வழியில் ஒரு சமணத்தீர்த்தங்காரர் சிலை உள்ளது. அதைப்பார்த்தல்.
-பெரும்பாலும் அனைவருக்கும் இயற்கை உணவு
இடம்:
கொல்லி மலை, நாமக்கல் மாவட்டம்.
தொடர்புக்கு : வரதராஜன் , நாமக்கல் : 9952430125
வாசு , நாமக்கல் : 8098225512
கொல்லி மலை வருகை முன்பதிவு படிவம்