பிழைத்தல், இருத்தல்,வாழ்தல்- கடிதங்கள்

1

 

ஜெ
பிழைத்தல் இருத்தல் வாழ்தல் ஓர் அரிய கட்டுரை. கொஞ்சகாலம் முன்புவரைக்கும் இத்தகைய ஒரு கேள்வியே எழவில்லை. எப்படியாவது வாழ்ந்தால்போதும் என்ற நிலையே பொதுவாக எல்லாருக்கும் இருந்தது. குடும்பம் முன்னேறினால்போதும் எனக்கென்று ஒரு சந்தோஷமே வேண்டியதில்லை என்று எல்லாரும் நினைத்தார்கள். அந்தக்காலமே வேறு. இப்போது இந்தக்கேள்வி எழுகிறது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா? இந்தக்கேள்வியைக் கேட்டதுமே எல்லாமே மாறத்தொடங்கிவிடுகின்றன. வாழ்க்கை என்றால் என்ன, ஏன் வாழ்கிறோம் எல்லாமே வந்துவிடுகிறது. உண்மையான சந்தோஷம் என்பது இந்த உலகிலேயே உள்ளது, அதை நாம் கண்டடையவேண்டும் என்று தோன்றுகிறது. அதைக் கண்டடைய முடிவதில்லை. ஆகவேதான் நாம் நவீன சாமியார்களைத்தேடிச்செல்கிறோம். உங்கள் கட்டுரை அந்த அடிப்படையான கேள்வியை எழுப்பி ஆழமான ஒரு பதிலை அளிக்கிறது. முக்கியமான கட்டுரை

சிவராமன்

அன்புள்ள ஜெ

>

ஜெ
அருமையான கட்டுரை.

மீண்டும் படிக்கையில் இதைப் பகிரத் தோன்றியது.

சாஸ்தா மலையைப் பார்க்கையில் திருவண்ணாமலை உங்களுக்கு தரிசனம் தந்தது போல்
நாங்கள் டில்லி சென்றிருந்த போது இது போன்ற அனுபவம் ஒன்று எனக்கு
ஏற்பட்டது. 8 வருடங்களுக்கு முன்பு.

ஜும்மா மசூதிக்குச் சென்றிருந்தோம். ஒருவர் சொன்னார் இவ்விடத்தில்
மதியத்தில் ஒரே சமயத்தில் 20,000 பேர் தொழுகை செய்வார்கள் என்று.
சிலிர்த்துப் போனேன். 20,000 பேர் கூடி தொழுகை செய்யும் போது
அவ்விடத்தில் எப்படிப் பட்ட உணர்வுகள் கலந்தோடி காற்றில் இணைந்து அந்த
இறையை நோக்கிப் பயணிக்கும் என்று  எண்ணிக் கொண்டேன்.

ராமனும் கண்ணனுமே என் இரு கண்களானவர்களை காண விரும்பி மண்டி இட்டு அங்கே
அவர்களை மனக் கண்களால் கண்டு விரும்பித் தொழுதேன். அந்நினைவு இன்று வரை
என்னுடன் இருந்து கொண்டே இருக்கிறது. இதுவே நான் வாழ்ந்த மிகச் சிறந்த
தருணம் என்று பல நாட்கள் நான் நினைத்ததுண்டு.

உங்கள் கட்டுரை அதை மெய்ப்படுத்தியது.

நன்றி
அன்புடன்
மாலா

*

ஜெ

சிறந்த கட்டுரை. உங்கள் நூல் ஒன்றில் இக்கட்டுரையை நான் முன்னரே வாசித்திருந்தாலும் மீண்டும் வாசித்தேன். பலர் முன்னரே சொன்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் உங்களுக்கே உரிய ஆணித்தரமான நடையில் சொல்கிறீர்கள்

பொதுவாக அனைத்து எழுத்தாளர்களும் அரசியலைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது காமத்தை. அத்தனை வாழ்க்கைப்பிரச்சினைகளுக்கும் அரசியலிலேயே தீர்வுகாண நினைக்கிறார்கள் . ஆகவே அவர்களின் எழுத்துக்கள் கூச்சலிடுகின்றன. இப்படி வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப்பார்க்கும் பார்வை என்பது ஒரு தொகுப்புநோக்கு கொண்ட எழுத்தாளர்களுக்கே வரும் என நினைக்கிரேன்

நன்றி

அருணாச்சலம் எம்

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 67
அடுத்த கட்டுரைசிற்பங்களைப் பயில…