பின்நவீனத்துவம் பற்றி வாசிக்க

1

வணக்கம் சார்.

இணையத்தில் உங்களது கடிதப் பதிவைப் பார்த்தேன். அதற்கு தோதாக, எனக்கு ஏற்பட்டிற்கும் சில ஐயங்களை தங்களுடன் இக்கடிதம் மூலம் பகிர எண்ணுகிறேன். முதலில் என்னைப் பற்றி பேசிவிடுகிறேன். நான் ஒரு ஆய்வு மாணவன்; தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழில், ராஜ் கெளதமன் எழுத்துக்களில் பின் நவீனத்துவக் கோட்பாட்டுத் தாக்கம் என்கிற தலைப்பின் கீழ் கடந்த இரண்டாண்டுகளாக முனைவர் பட்டம் மேற்கொண்டு வருகிறேன்.

தமிழில் பின் நவீனத்துவம் பேசியவர்கள் – பேசுபவர்கள் – அவர்கள் எழுதிய எழுத்துக்கள் என  கூடிய அளவு சேகரித்துவிட்டேன். ஆனால், எவற்றை; யாருடையதை  முதலில் படிக்கத் தொடங்குவது என்கிற கேள்வி என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது. அவரவர் அவரவர் இழுப்புக்கு ஏதோதோ சொல்லி வைக்கிறார்கள். நான் யாரை முதலில் பின்பற்றுவது என்று தெரியவில்லை? அதுபோல், பின் நவீனத்துவம் குறித்த ஆங்கில நூல்கள் ஏதேனும் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

நன்றி.

அன்புடன்,

பிரேம் ஆனந்த்.

தில்லி.

 

அன்புள்ள பிரேம் ஆனந்த்

ஆங்கிலத்தில் பின் நவீனத்துவம் என்று அடித்து கூகிளில் தேடினாலே ஏராளமான நூல்கள் கிடைக்கும். இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்த நூல் மதன் சருப் எழுதிய An Introductory Guide to Post-Structuralism and Postmodernism  

இந்நூலைப்பற்றி அன்றே ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறேன். தமிழிலேயே வாசிப்பதாக இருந்தால் கோபிசந்த் நாரங் எழுதிய அமைப்புவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல் [சாகித்ய அக்காதமி வெளியீடு. தமிழாக்கம் எச்.பாலசுப்ரமணியம்] பல வகையிலும் உதவியான நூல். வாசித்துப்பார்க்கலாம்

ஜெ

பின்நவீனத்துவச் சிந்தனைகள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
அடுத்த கட்டுரைகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?]