ஜெ
ஒரு ஃபேஸ்புக் கவிதை.வாட்ஸப்பிலே வந்தது.
உங்கள் திருமணத்தன்று
நான் எங்கிருந்தேன் ?’
மகளின் கேள்விக்கு
விடைகூற முயன்றேன்.
“அந்தத் தீயின்
நடுச்சுடராக ஒளிர்ந்திருந்தாய்.
எம் தலைமீது தூவப்பட்ட
அட்சதையில்
ஒரு மணியாக இருந்தாய்.
சூடிய மாலை நறுமணத்தில்
இருந்ததும் நீதான்.
தாத்தா பாட்டியரின்
கண்களில்
நீர்த்துளியாக நீ திரண்டு நின்றாய்.
உன் தாயைக் கரம்பற்றிய
என் உள்ளங்கைக்குள்
வெப்பமாக இருந்ததும்
நீயே…!”
எப்டி இருக்கு?
சீனிவாசன்
சீனிவாசன்,
பாவம், யார் பெத்த பிள்ளையோ ரொம்ப ஃபீல் ஆயி எழுதியிருக்கு.
பொண்ணு எங்க உண்மையிலே இருந்தாளோ அதை மட்டும் சொல்லாம மிச்ச எல்லாத்தையும் சொல்லிட்டா அது கவிதைன்னு நினைச்சிருக்கு போல.
ஜெ