மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா? நான் சக்திவேலன் ( ஆசிரியர், புதியவிதி). இதுவே என்னுடைய முதல் கடிதம் உங்களுக்கு.
முதலில் ’புதியவிதி’யை பற்றி சில வரிகள்…
புதியவிதி – ஊடகத்துறையில் இளைஞர்களால் விதைக்கப்பட்டிருக்கும் முதல் விதை.
இளைஞர் சக்தியை ஆணிவேராக கொண்டு பிறப்பெடுத்திருக்கும் முதல் ஊடகம்.
எத்தனையோ தடைகளை கடந்து மலர்ந்திருக்கும் இதழ்.
இளைஞர்களின் உழைப்பால் புதியவிதியின் உதயம் நிகழ்ந்திருக்கிறது. அந்த உதயம் அனைவருக்காகவும்!
இளைஞர்களே புதியவிதியின் இதயம். அந்த இதயம் அனைவருக்காகவும் துடிக்கும்!
முழுக்க முழுக்க இளைஞர்களே புதியவிதி அணியில் இருக்கிறார்கள். அறிவும் ஆற்றலுமே எங்கள் துணை!
இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. செல்வோம் என நம்புகிறோம்.
எதிலுமே ஒரு ஆரம்பம் வேண்டும் என்பார்கள். புதியவிதி அத்தகைய ஆரம்பம்!
’புதியவிதி’ இதழைப் பற்றி…
அனைத்துத் தரப்பினரையும் கவரும் உள்ளடக்கங்களை தாங்கி `புதியவிதி மாதமிருமுறை இதழ்`(சில மாதங்களில் வார இதழாக பரிமாற்றம் அடையும்*) வெளிவர இருக்கிறது. வடிவமைப்பிலும் தரத்திலும் முன்னணி இதழ்களை போலிருக்கும் ‘புதியவிதி’. வண்ணக் காகிதத்தில் அச்சிடப்பட்ட பக்கங்களுடன், உயர்தரத்தில் தமிழ்நாடெங்கும் வெளிவர இருக்கிறது. அரசியல், இலக்கியம், சினிமா, வாழ்வியல் , நையாண்டி, விளையாட்டு, வரலாறு , தொழில்நுட்பம் , இளைஞர் நலன் என ஆல் ரவுண்டராக ‘புதியவிதி இதழ்’ களமிறங்குகிறது. ஸ்பெஷல் கட்டுரைகள், அசத்தல் படங்கள், ஷார்ப் கவரேஜ் என ‘புதியவிதிஇதழ்’ பிறக்கிறது.
புதியவிதி மாதமிருமுறை இதழ் பிப்ரவரி 15ம் தேதி முதல் கடைகளில் கிடைக்கும். அதே தேதியில், மின்னிதழ் புதியவிதியின் இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
வாழ்த்துங்கள்…
புதியவிதி இதழில் உங்களுடைய படைப்பு இடம்பெற வேண்டும் என விரும்புகிறோம்.தொடராகவோ, சிறுகதையாகவோ ஏதேனும் ஒரு வடிவில்.
இளைஞர்களை ஊக்குவிப்பவர் நீங்கள் என்ற முறையில் எங்கள் எண்ணத்தை உங்கள் முன் வைக்கிறோம். ஒப்புதல் என்றால் மிகவும் மகிழ்வோம்.
புதியவிதி முதல் இதழ் வெளியீட்டு விழா, வரும் 14ஆம் தேதி கோவையில் நடக்க இருக்கிறது. இடம் இன்னும் முடிவாகவில்லை. முடிவானதும் விரிவான விவரங்களுடன் உங்களுக்கு அழைப்பிதழை அனுப்புகிறோம். நீங்கள் நேரில் வந்து ( உங்களுக்கு நேரமிருந்தால்) எங்களை வாழ்த்த வேண்டும் என விரும்புகிறோம்.
என் சார்பில் சில வார்த்தைகள்…
இளைஞர்கள் கையில் ஒரு ஊடகம் இருக்க வேண்டும் ; அது அனைவருக்காகவும் செயல்படவேண்டும். இந்த எண்ணமே ’புதியவிதி’ உருவாக காரணம்.
இந்த பயணத்தை தொடங்கிய நாளில் இருந்து இதுவரை எத்தனையோ தடைகள், கஷ்டங்கள் என்னை ஆட்கொண்டன. அப்போதெல்லாம் என்னை மீட்டெடுத்தது வெண்முரசு தான். இப்போதும் என்னை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், நீங்கள் என் வாழ்வில் முக்கியமானவர்.
உங்களின் வெண்முரசு மூலமாகவே என்னுடைய உத்வேகம் அதிகரித்தது. வேகமும், வேட்கையும் கொண்ட இளைஞர்களை இணைக்க முடிந்தது. ’புதியவிதி’ உருவானது.
உங்களை நேரில் சந்திக்க விருப்பம்.
Thanks & Regards
Sakthi Velan
| Editor in Chief , Puthiyavidhi |
[ Mobile : 9655205411 ]
|PUTHIYAVIDHI TAMIL MAGAZINE|
40-C , Sri Kumaran Building,
100 ft Road , Gandhipuram,
Coimbatore – 641012
Phone : 0422 43 73 515 | Mobile & WhatsApp : 9047 419 419Mail : [email protected] | Webste : www.puthiyavidhi.com