இணைப்புகள்,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

// ஒரு மனிதனின் வாழ்க்கையின் அனுபவங்கள் மிகக்குறைவாகவே இருக்க முடியும். இலக்கியம் அவனுக்கு மேலும் மேலும் அனுபவங்களை அளிக்கிறது. ஒரு வாழ்க்கைக்குள் பற்பல வாழ்க்கைகளை வாழும் வாய்ப்பை அளிக்கிறது. அதிக
வாழ்க்கையில் இருந்து அதிக விவேகமும் அதிக பக்குவமும் அதிக அறிவும் அவனுக்கு உருவாகிறது. இலக்கியம் போதனைசெய்வதில்லை, வாழ்க்கையை கற்பனைமூலம் இன்னும் உக்கிரமாக இன்னமும் விரிவாக நிகழ்த்திக்கொள்ள வழிசெய்கிறது. அப்படி நிகரான வாழ்க்கையை அளிக்கும் இலக்கியங்களே கலைப்படைப்புகள். அவற்றில் வாழ்க்கையில் உள்ள அனைத்துமே இருக்கும் //

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். சமீபத்தில் என் படிக்கிறேன் என்று
மண்டையைக் குழப்பிக் கொண்டு ஒரு பதிவு எழுதினேன். அதைப் பார்த்து நண்பர்
பாஸ்கரும் எழுதினார். நான் “புதிய உலகங்களை காட்டுகிறது” என்று
கஷ்டப்பட்டு எழுதியதும் பாஸ்கர் “அந்நியர்களை நம்மவர்களாக்குகிறது” என்று கவித்துவமாக எழுதியதும் இதைத்தான் எதிரொலிக்கிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள்.

ஏன் படிக்கிறேன்

புத்தகம் சுமத்தல்

காந்தி பற்றிய உங்கள் பதிவு (வழக்கம் போல) அருமையாக இருந்தது.
எனக்கென்னவோ காந்தியின் சிந்தனைகளை என் மாதிரி ஆட்களுக்கு சரியாக “மொழிபெயர்க்கக்” கூடியவர் நீங்கள் ஒருவர்தான் என்று தோன்றுகிறது.

சமீபத்தில் இந்த இணைய பத்திரிகையைப் பார்த்தேன். உருது இலக்கியம் பற்றிய ஸ்பெஷல் இஷ்யூ. குறிப்பாக க்வாரதுலைன் ஹைதர் எழுதிய கதையையும், நையர் மசூத் எழுதிய கதையையும் படியுங்கள். ஹைதர் கலக்கிவிட்டார். மசூத் எழுதிய கதை எனக்கு முழுமையாக புரியவில்லை, ஆனாலும் ஏனென்று விளக்க முடியாவிட்டாலும், பிடித்திருக்கிறது!

http://wordswithoutborders.org/current-issue/

ஹைதர் எழுதிய கதை – http://wordswithoutborders.org/article/beyond-the-fog/
மசூத் எழுதிய கதை – http://wordswithoutborders.org/article/destitutes-compound/

மற்றபடி நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அஜிதனைப் பிரிந்திருக்க பழகி  விட்டீர்களா?

அன்புடன்
ஆர்வி

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் புத்தகங்களையும் வலைப்பூவையும் ஒரு வருடமாய் வாசித்து வருபவன் என்ற நிலையில் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வலைப்பூவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இதை தாங்கள் வாசித்து உங்கள் எண்ணம் பகிர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன். இது தங்கள் எண்ணம் மற்றும் வழிகாட்டல் பெற மட்டுமே அனுப்புகிறேன். தங்கள் தளத்திலிருந்து சுட்டி பெரும் எண்ணம் இல்லை. தங்கள் இலக்கியப்பணிக்கு நடுவில் நேரம் கிடைத்தால் படித்து வழிகாட்டவும்.

http://tamizhilsrinath.blogspot.com/2010/04/blog-post.html

நன்றியுடன்,

ஸ்ரீநாத்

Dear Mr.Jeyamohan,

I found these pages interesting – thought of sharing it with you.

http://www.tinytechindia.com/bascon.htm

Warm regards,

muthiah sivasailam

முந்தைய கட்டுரைநமது மருத்துவம் பற்றி மேலும்..
அடுத்த கட்டுரைபோலிக்கறுப்பு