இணையத்தில் இலக்கியம்

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.

திண்ணை இணையதளத்தின் பழைய இலக்கங்களில் நல்ல கதைகள் பல உள்ளன. ஆனால் திண்ணை என்ற பிரம்மாண்டமான குப்பைக்குவியலில் இருந்து அவற்றை தேடி எடுப்பது கடினம். http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது

ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம்

முந்தைய கட்டுரைஏன் அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை
அடுத்த கட்டுரைதீ அறியும் (குறுநாவல்) : 4