புதியவர்களின் கடிதங்கள் 13

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அறம் என்னும் தலைப்பின் ஈர்ப்பின் காரணமாக தங்களின் “அறம்” நூலை வாசித்தேன். அதுதான் என்னுள் எரியும் பெரும் தீயின் முதற்கனல் அதை ஏற்படுத்தியது பிரம்மம் என உறுதியாக இருக்கிறேன்.அந்தக்கணம் அர்ஜுனன் துரோணரை கண்டடைந்தபொழுது அடைந்த பேர் உவகையை நானும் அடைந்தேன்.

அறம் என் மனதில் சொல்ல முடியா பாதிப்பை ஏற்படுத்தியது.உடலில் கட்டுண்டள்ள என் ஆத்மாவின் விழைவின் காரணமாக புறப்பாடு படித்தேன்.புறப்பாடு நாவலில் உங்கள் நினைவுகளில் நான் வாழ்ந்தேன்.புறப்பாடு முடிந்தபொழுது எனக்குள் ஒரு வெறுமையும் என் ஆத்மா ஒரு அக எழுச்சியும் கொண்டது. அதன் பிறகு உங்களது இரவு நாவல் படித்தேன்.இரவு நாவல் படித்த முடித்த சில நாட்கள் கிளர்ச்சி (பைத்தியமாகிய) நிலையிலேயே இருந்தேன்.

அதிலிருந்து சில இந்து மதத்தின் தகவல்களால் “இந்து மதத்தின் ஆறு தரிசனங்கள்” படித்தேன். (அடுத்த இலக்கு விஷ்ணுபுரம்)உங்களுடைய திசைகளின் நடுவே கதை படித்தேன் அது என் மனதின் சமநிலையை குலைத்து புது மனதினை உருவாக்கியது.நான் என்றும் அந்த குலைவையே விரும்புகிறேன்.உங்களுடைய அனைத்து படைப்புகளிலும் அதையே தேடுகிறேன்.அதன் பிறகு உங்களுடைய இன்றைய காந்தி படித்தேன்.அதை படிப்பதிற்க்கு முன்பு நான் ஒரு அரைவேக்காட்டு கம்யூனிஸ்ட். தற்பொழுது காந்திய முன்னிறுத்துகின்ற காந்தியவாதி.

இன்றைய காந்திக்கு பிறகு என்னில் வரலாற்றை அணுகும் விதம் மாறியது மற்றும் முரணியக்கம் குறித்த பார்வையையும் அடைந்தேன்.தற்பொழுது வெண்முரசில் நீலம் படிக்கிறேன் மற்றும் உங்களுடயை கட்டுரைகளை தினமும் படிக்கிறேன். என்னுள் நிறைய மாற்றங்களை உணர்கிறேன்.சுந்தரராமசாமிக்கு ஜே.ஜே ஏற்படுத்திய அதே தாக்கத்தை நானும் உணர்கிறேன்.இந்த 21 வயதில் இயற்கையை ரசிக்கவும்,மனிதத்தை நேசிக்கவும்,உலகத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவும் கற்றுத்தந்தவர் “குரு”அன்றி வேறேதும் இல்லை.நிறைய நாட்கள் நினைத்து இன்றுதான் எழுத முடிந்தது.பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.

இப்படிக்கு

ஜினுராஜ்.

முந்தைய கட்டுரைகாலமின்மையின் கரை- கடிதங்கள்
அடுத்த கட்டுரையாதெனின் யாதெனின்…