சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடனமங்கை’

indrajith80

சுரேஷ்குமார இந்திரஜித் தமிழ் இலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் இலக்கிய நுட்பம் ஒன்றின் பிரதிநிதி. குறைத்துச் சொல்லுதல், முடியுமென்றால் சொல்லாமலேயே இருந்துவிடுதல், என்னும் கலைப்பாணி அது. அவரது அலையும்சிறகுகள் என்னும் முதல்சிறுகதைத்தொகுதி எண்பதுகளின் தொடக்கத்தில் அதன் ‘கதையற்ற தன்மை’க்காகவே கவனிக்கப்பட்டது

சுரேஷ்குமார இந்திரஜித்தின் உலகம் பெரிதும் நகர்சார்ந்தது. மனிதமுகங்கள் இருக்கும், கதாபாத்திரங்களாக அவை வரையறைசெய்யப்பட்டிருக்காது. இடங்கள் இருக்கும், அவை மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களைச் சுமந்துகொண்டிருக்காது. உளவியல் அவதானிப்புகள் இருக்கும், உளமோதல்களின் நாடகத்தனம் இருக்காது. நிகழ்வுகள் இருக்கும் கதை இருக்காது

ஆனால் இந்த சித்தரிப்புகள் வழியாக எப்போதும் வாழ்க்கையின் ஒரு துண்டை அவர் வெட்டி எடுத்துவைக்கிறார். ஆகவே அவை கலைப்படைப்புகளாக ஆகின்றன.

1

சுரேஷ் குமார இந்திரஜித்தின் சிறுகதைத்தொகுதியான நடனமங்கை பற்றி சுனீல் கிருஷ்ணன் எழுதியிருக்கும் மதிப்புரை

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் 9
அடுத்த கட்டுரைமகாபாரதம் திரையில்…