நூறுநாற்காலிகள் பற்றி…

1

வணக்கம் ஜெ,

 

                           நல்லா இருக்கீங்களா? நூறு நாற்காலிகள் இன்று மீண்டும் படித்தேன். கதையின் பல இடங்களில் வார்த்தைகளற்ற, காட்சிகளற்ற ஒரு வெற்றுத்தன்மைக்குத் தள்ளப்பட்டேன். ஜீரணிக்க முடியாத அளவு அல்லது கடந்து செல்ல முடியாத அளவு ஏதோ ஒரு துக்கம் மனதைப் பிடித்துக்கொண்டது. இந்தக் காட்சிகளை எழுத்தில் கொண்டுவரும்போது ஜெ என்ன மனநிலையில் இருந்திருப்பார்? இன்று அவரே அதை மீள் வாசிப்பு செய்தால் என்ன நினைப்பார்? என்றெல்லாம் எத்தனையோ கேள்விகள்…
சில படைப்புகள் வாசகனை வாசித்த அடுத்த சில மணி நேரங்களுக்கு அசைய விடாமல், ஏதும் செய்ய விடாமல், பித்துப் பிடித்தது போன்ற ஒரு மன நிலைக்குக் கொண்டுசென்று விடுமல்லவா. இன்றைய வாசிப்பு ஒரு தரிசனமாகவே அமைந்துவிட்டது.மனதார, விரும்பி உங்களுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.
 உங்கள் கைகளைப் பிடித்து சந்தோசத்தில் இந்தக் கணத்தில் பாராட்டுகிறேன் ஜெ.

அன்புடன்

சுஷீல்

 

அன்பு ஜெ ,

ரோஹித் வெமுலா பற்றிய உங்கள் குறிப்பைப் பார்த்தேன் . “நூறு நாற்காலிகள்” போன்ற கொடுமைகளெல்லாம் வேறெங்கோ வேறெப்போதோ நடந்தவை என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன் .
நூறு நாற்காலிகள் படித்ததிலிருந்தே அந்த அசட்டுத்தனம் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது .

நேர மாற்றத்தால் நேற்று இரவு தூக்கம் பிடிக்காமல் யூடியூப் நோண்டிக்கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது.அதில் குறிப்பிட்ட ஒரு பகுதி அப்படியே நூறு நாற்காலிகளை நினைவுறுத்தியது.
கீழ் கண்ட சுட்டியில் நேரடியாக அந்தப்பகுதி உள்ளது.இதில் கணவன் மனைவி இருவருமே உயர் பதவி வகிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் .

மிக நன்றாக எடுக்கப்பட்ட ஆவணப்படம். இதில் மனதை மிகவும் உலுக்கும் பகுதிகள் கிராமங்களில் தலித் குழந்தைகள் தீண்டாமை என்றால் என்ன என்று உணரும் முன்பே தீண்டாமைக்கு உட்பட்டுத்தப்படுவதும் அவர்கள் அதை தமது வயதுக்கே உரிய வெகுளித்தனத்துடன் சிரித்துக்கொண்டும் வெட்கப்பட்டுக்கொண்டும் சொல்லுமிடங்கள் . சாதீயத்தின் உளவியல் ரீதியான வன்முறையும், அவர்கள் இடத்தில் நாம் இருந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறின் தற்செயலும் நினைத்துப் பார்க்கவே பதறுகிறது. முழு ஆவணப்படமும் அவசியம் அனைவரும் காணவேண்டிய ஒன்று .கீழ் கண்ட சுட்டி மூலம்

விஜயாவில் நூறு நாற்காலிகள் குறைந்த விலை பதிப்பு பில் போடும் இடத்தில் கண்ணில் படும்படி வைத்திருக்கிறார்கள்
அன்புடன்

கார்த்திக்

 

நூறுநாற்காலிகளும் விஷ்ணுபிரியாவும்

 


அறம் அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைபுதிய வாசகர்களின் கடிதங்கள் 8
அடுத்த கட்டுரைபத்மஸ்ரீ – இறுதியாகச் சில சொற்கள்