“நம் நாயகம்”

Nam Nayakam Invitation
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, சிறுகுழந்தைகள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்த 63 சம்பவங்களின் அடிப்படையில் “நம் நாயகம்” என்ற நூலை, – ஆங்கிலத்தில் Bed time stories இருப்பது போல, தத்தமது குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் இரவு நேரத்தில் கதை சொல்வது போல –  நாயகத்தின் வாழ்க்கையிலிருந்து நல்ல விசயங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தோடு, வழக்கு மொழியிலேயே எழுதியிருக்கிறேன்.

 

வரும் ஜனவரி மாதம் 23ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில்  நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. கவிக்கோ திரு. அப்துல் ரஹ்மான் வெளியிட திரு. சலாஹுதீன் பெற்றுக் கொள்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க விரும்புகிறேன்.

 

 

இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையும் இத்துடன் இணைத்துள்ளேன். விழாவிற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன். விழாவின் இறுதிவரை எங்களோடு இருந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,

ஜெஸிலா
அன்புள்ள ஜெசிலா அவர்களுக்கு,
நலம்தானே?
ஜனவரி மாத இறுதியில் நான் சென்னை வர வாய்ப்புண்டு. சென்னையில் இருந்தால் கூட்டத்தில் கலந்துகொள்கிரேன். வாழ்த்துக்கள்
ஜெ