செவ்விலக்கியங்களும் செந்திலும்

senthil

தமிழில் சென்ற சில ஆண்டுகளில் சீரிய இலக்கிய வாசிப்பாளனுக்கு இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், நோக்கம் ஆகியவற்றை தெளிவாக்கும் சில பேரிலக்கியங்கள் மொழியாக்கங்களில் கிடைத்தன. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு முன்னரே வெளிவந்திருந்தாலும் சமீபமாகத்தான் மறு அச்சு வெளிவந்தது.

தஸ்தோயின் அன்னா கரீனினா க.சந்தானத்தின் சுருக்கமான மொழியாக்கமே முன்னர் இருந்தது. இப்போது முழுமையாகக்கிடைக்கிறது. அன்னா கரீனினா [நா தர்மராஜன்],  தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் [எம்.ஏ சுசீலா] ,அசடன் [எம். ஏ சுசீலா] ஆகியவை வெளிவந்தன. அவரது மாபெரும்நாவலான கரமஸோவ் சகோதரர்கள் [புவியரசு] வெளிவந்துள்ளது

இப்படைப்புக்கள் என்னவகையான விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன? பரவலாக இளையதலைமுறையால் வாசிக்கப்பட்டிருக்கின்றனவா? சில அபூர்வமான கட்டுரைகளைத்தான் என்னால் காணமுடிந்தது.போரும் அமைதியும் பற்றி நண்பர் டோக்கியோ செந்தில் எழுதியிருக்கும் இந்தக்குறிப்புகள் முக்கியமானவை. இங்குள்ள ஒரு வாசிப்புச்சூழலில் நின்றபடி தல்ஸ்தோயை மதிப்பிடமுயல்பவை.
http://www.manavelipayanam.blogspot.jp/2014/09/1.html
http://www.manavelipayanam.blogspot.jp/2014/09/2.html
http://www.manavelipayanam.blogspot.jp/2014/09/3.html

 

பேரா நா தர்மராஜன்

 

வாழ்க்கையின் விசுவரூபம்

 

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

 

ஓர் எளிய கூழாங்கல்

 

தஸ்தயேவ்ஸ்கி தமிழில்

 

குற்றமும் தண்டனையும்

 

அசடனும் ஞானியும்

 

இரண்டாம் மொழிபெயர்ப்பு

 

மொழியாக்கம் கடிதங்கள்

 

மொழியாக்கம்:கடிதங்கள்

 

தஸ்தயேவ்ஸ்கி கடிதங்கள்

முந்தைய கட்டுரைபுதியவாசகர்களின் கடிதங்கள் 5
அடுத்த கட்டுரைராஜாவுக்கு விருது