ஈரோடு சந்திப்பு -ஒருகடிதம்

1

ஜெ

ஊட்டி சந்திப்புக்கே வர விரும்பினேன். இடங்கள் முடிந்துவிட்டன என்றுதெரிந்ததும் சோர்வு அடைந்தேன். அதன்பின்னர் ஈரோடு சந்திப்பு. அதுவும் முழுமையடைந்துவிட்டது என்று வாசித்தேன். நான் வரவிரும்புகிறேன். இடமிருக்குமா?

கதிர்

அன்புள்ள கதிர்,

பொதுவாக இம்மாதிரி நிகழ்வுகளை முடிவுசெய்வது மிகக்கடினம். என்ன சிக்கலென்றால் ஓர் இடத்தில் அதிகபட்சம் இவ்வளவுபேர் என முடிவுசெய்திருப்போம். அதைவிட சற்று அதிகமானவர்கள் வர விரும்பியதும் நிறுத்திக்கொள்வோம். ஆனால் வருவதாகச் சொன்னவர்களில் பலர் சில்லறைக் காரணங்களுக்காக வராமலிருந்துவிடுவார்கள். அது ஒரு தமிழ் மனநிலை. அதாவது ஆர்வம் இருக்கும் ஆனால் தீவிரம் மிகமிகக் குறைவாகவே இருக்கும். முடிந்தால்செய்யலாம் என்பதே பலருடைய இயல்பு.

தீவிரமில்லாமை என்பது எந்தத்தளத்திலும் பெரிய சோர்வு. அதை மாற்றவே இந்தவகையான சந்திப்புகளால முயலப்படுகிறது. பொதுவாக இளைஞர் , புதியவர்கள் என்னும்போது கடைசிநேரத்தில் ‘மழைபேஞ்சுதுசார். வரமுடியலை’ வகை சாக்குபோக்குகள் நிறையவே வரும் என நினைக்கிறேன். ஆகவே நீங்கள் வரலாம். இடமிருக்கும் என்றே நினைக்கிறேன்

ஜெ

 

முந்தைய கட்டுரைஇலக்கியம் மானுடனை மாற்றுமா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 29