புதியவாசகர் சந்திப்புகள்,ஊட்டி,ஈரோடு -அறிவிப்பு

images

அன்புள்ள நண்பர்களுக்கு

புதியவாசகர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சிகளை முழுமைசெய்துவிட்டோம். இரு நிகழ்ச்சிகள். ஊட்டி, ஈரோடு

ஊட்டி

முதலில் கடிதம்போட்டவர்களுக்கான நிகழ்ச்சி ஊட்டியில் பிப்ரவரி 13, 14 [சனி ஞாயிறு] நாட்களில் நிகழும்.

சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன் முடிவடையும்.

இடம்

நாராயணகுருகுலம்
ஃபெர்ன் ஹில்
மஞ்சணகொரே கிராமம்
ஊட்டி

தொடர்புக்கு
நிர்மால்யா, 09486928998
விஜய்சூரியன் 9965846999

[ஊட்டியில் குளிர் இருக்குமென்பதனால் ஸ்வெட்டர் மப்ளர் போன்றவை கொண்டுவரவும். போர்வை, மெத்தை, ஹீட்டர் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இருந்தாலும் ஒரு சால்வையும் உடனிருப்பது நல்லது]

==========================================================================================

ஈரோடு

இரண்டாவதாக எழுதியவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஈரோடு சந்திப்பு நிகழ்ச்சி ஒருவராம் முன்னதாக பிப்ரவரி 6,7 [சனி ஞாயிறு] நாட்களில் நடக்கும்

சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன் முடிவடையும்.

இடம்

பெத்தாம்பாளையம்
காஞ்சிகோயில் அருகே
ஈரோடு

தொடர்புக்கு : கிருஷ்ணன் 9865916970

=========================================================================

இரு நிகழ்ச்சிகளுக்கும் வரவிருப்பவர்களுக்கு தனிப்பட்டமுறையில் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மின்னஞ்சல்கள் கிடைக்காதவர்கள் [email protected] என்னும் மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளலாம்

கிடைத்தவர்கள் அம்மின்னஞ்சலில் வருகையை உறுதிசெய்து பதில் அளிக்கவேண்டும். இருநாட்களில் வருகையுறுதி செய்யப்படவில்லை என்றால் வராதவர் என்று கணக்கிடப்பட்டு அந்த இடம் பிறருக்கு அளிக்கப்படும்

========================================================================================

விதிகள்

1. அழைக்கப்பட்டவர்களுக்கு தனியாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. முன்னரே தெரிவிக்கப்பட்டு, அழைப்பு அனுப்பபடாதவர்களை உடனழைத்துவரக்கூடாது.

2. இலக்கியம் அறியாத நண்பர்களை இதில் சேர்த்துக்கொள்ளவேண்டாம். ஆர்வமற்ற நண்பர்கள் சந்திப்பில் பெரும் சிக்கல்களை உருவாக்குவார்கள்

3. சந்திப்பின் பொருட்டே இவ்வேற்பாடுகள். ஆகவே சந்திப்பின் எல்லா அமர்வுகளிலும் பங்கெடுத்தாகவேண்டும். சுற்றிப்பார்ப்பதெல்லாம் சந்திப்பு முடிந்தபின்னர் தனியாகச் செய்துகொள்ளலாம். [எங்கள் ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு ஓர் இன்பச்சுற்றுலாவாக இதை ஆக்குவது எங்களுக்குச் சங்கடம் அளிப்பது இல்லையா?]

4. முன்னரே வருகையுறுதிசெய்த பின்பு வராமலிருப்பதென்பது வரவிரும்பும் ஒருவரின் வாய்ப்பை பறிப்பதுடன் அதை கணக்கிட்டு நாங்கள் செய்துவைக்கும் ஏற்பாடுகளையும் வீணடித்து இழப்பு அளிப்பது. ஆகவேஒருமுறை வருகை தவறியவர்கள் எக்காரணம் கொண்டும் எங்கள் எந்த அமர்விலும் பின்னர் சேர்க்கப்படமாட்டார்கள் . உரிய காரணத்தால் வரமுடியவில்லை என்றால் முன்னரே அறிவிக்கவேண்டும்

5. அரங்கு நிகழும் இருநாட்களிலும் மது அருந்துவது அனுமதிக்கப்படமாட்டாது

6. அரங்கில் இறுக்கமான விதிகள் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள், சீண்டல்கள் அனுமதிக்கப்படாது

  1. உணவுக்கும்தங்குமிடத்துக்கும் பணம் அளிக்கவேண்டியதில்லை. நன்கொடையாக அளிக்கவிரும்புபவர்கள் அளிக்கலாம்.

8. எளிமையான வசதிகளே இருக்கும். சேர்ந்து தங்குவதுபோல. பெண்களுக்கு தனிவசதி உண்டு.

இது முறைப்படுத்தப்பட்ட அரங்கு அல்ல. ஆகவே தயாரிப்புக்கள் ஏதும் தேவையில்லை. சந்திப்பில் பொதுவான உரையாடல்களுக்கு மேலதிகமாக வருபவர்கள் தங்கள் இலக்கிய வாசிப்பை, இலக்கிய எழுத்துமுறைகளை முன்னெடுப்பதைப்பற்றி பேசலாம்.

தங்கள் எழுத்துக்களை விவாதிக்க விரும்புபவர்கள் அவற்றில் முக்கியமான மிகச்சிறிய படைப்புகளை ஓர் இருபது பிரதிகள் தட்டச்சுப்பிரதி எடுத்துக்கொண்டுவந்தால் நல்லது

வருக

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28
அடுத்த கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல் -கோவை