கபாடபுரம் இதழ் கட்டுரை

 

1

கே என் செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் கபாடபுரம் இணைய இதழில் ஜெ ஆ.மாதவன் குறித்து எழுதியுள்ள கட்டுரை .

//ஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக்கொன்ற இளைஞன் என்னசெய்வான்? கற்பழிப்பு என்பது தப்ப மிக எளிதானது, தனக்காக வாதிட அசட்டு மனிதாபிமானிகளும் மொண்ணையான பெரியமனிதர்களால் ஆன நீதியமைப்பும் உள்ளது என புரிந்துகொள்வான். அந்தக்கற்பழிப்பை நிகழ்த்திய கணங்கள் தன் வாழ்க்கையின் உச்சநிலை என்றும் அப்போது தன்னில் வெளிப்பட்ட தானே உண்மையான தான் என்றும் உணர்ந்திருப்பான். ஆகவே சிக்காமல் கற்பழிக்க எண்ணுவான். அதுவன்றி எதுவுமே அவன் அகத்தைக் கிளரச்செய்யாது. இந்தக்குற்றத்தில் பிடிபட்டு நுட்பங்களை அவன் உணர்ந்துவிட்டமையால் அவன் மறுபடியும் பிடிபடாது போகலாம். ஆனால் உறுதியாக அவன் அக்குற்றத்தைச் செய்து கொண்டே தான் இருப்பான். நீதிபதிகள் முற்போக்கினர் வீட்டுப்பெண்களை அவன் அடைய வாய்ப்பில்லை என்பதனால் அவர்கள் ஆறுதல் அடையலாம்.

அப்படியென்றால் என்னதான் செய்வது? நேரடியான அப்பட்டமான பதில் சுட்டுத்தள்ளுவதுதான். ஏனென்றால் நாம் சமூகம் என எதை கட்டி வைத்துள்ளோமோ அதில் அவனைப் போன்றவர்களுக்கு இடமில்லை. அவர்களால் இங்கு வாழமுடியாது. இதற்கு எதிரான திசையில்தான் அவனால் செல்லமுடியும். ஆனால் சுட்டுத்தள்ளமுடியாது. அதில் என்னென்னவோ தடைகள். சட்டம், சமூகத்தின் மனசாட்சி. அவனைப்போல பிடிபடாதவர்கள் பலர் உள்ளனர் என்னும் தர்க்கம். ஆகவே சிறைவைக்கலாம். எத்தனை காலம்? அதுவும் பதில் இல்லாத வினாவே. எதிர்காலத்தில் நரம்பியல் ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம். இன்று இக்கேள்விக்கு பதிலே இல்லை என்பதே உண்மை

ஆ.மாதவனின் புனைவுலகம் இந்த அப்பட்டமான யதார்த்ததைக் கரும்பாறையில் என சென்று முட்டுகிறது. ஆகவே தான் அது தமிழின் அச்சமூட்டும் இலக்கியப்பரப்பாக இன்று உள்ளது.எட்டாவது நாள் குறுநாவலின் சாளைப்பட்டாணி என்னவாக இருந்திருக்க முடியும்? பிறந்தது முதல் அறிந்தது அந்தக் குற்றத்தின் மணத்தை. ஜோதி சிங் நிகழ்ச்சியைப்போலவே ஒரு ஆக்ரோஷமான பாலியல்வன்முறை அதிலும் உள்ளது. சாளைப்பட்டாணி இம்மிகூட குற்றவுணர்வு கொள்வதில்லை. மட்டுமல்ல அவனுக்கு அது ஓர் இனிய நினைவும்கூட.//

http://www.kapaadapuram.com/?p=1335

 

முந்தைய கட்டுரைசங்கரர் உரை கடிதங்கள் 5
அடுத்த கட்டுரைஆடல்