வெண்முரசு – சிறியநாவல்கள்

IMG_20151227_173620

வெண்முரசின் நாவல்கள் அனைத்துமே பெரியவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த துணைக்கதைகளும், வெவ்வேறு நூல்களை நோக்கிச் சுட்டும் உள்வழிகளும் மொழியின் கட்டற்ற பாய்ச்சல்களும் கொண்டவை. எனவே அவை இலக்கியப்பழக்கமுடைய நுண்வாசகர்களுக்குரியவை. அவர்களால்கூட விரிவான விவாதம் வழியாகவே புரிந்துகொள்ளக்கூடியவை

இந்தியப்பாரம்பரியத்தையும் அதன் உள்வழிகளையும் அறிந்துகொள்ள ஆர்வமுடைய ஆனால் இலக்கிய அறிமுகம் அற்ற வாசகர்களுக்காக வெண்முரசு நாவல்களில் இருந்து சில கதைகளைத் தொகுத்து சில சிறிய நூல்களாக வெளியிடலாம் என்னும் எண்ணம் நண்பர்களிடம் வந்தது. அதையொட்டி சில கதைகள் மட்டும் வெட்டி தொகுக்கப்பட்டு நான்கு நாவல்கள் வெளிவந்துள்ளன

கர்ணனின் கதையைச்சொல்லும் ’செம்மணிக்கவசம்’ அம்பையின் கதையைச் சொல்லும் எரிமலர் துரோணரின் கதையைச் சொல்லும் ‘புல்லின் தழல்’ கார்த்தவீரியன் – பரசுராமர் கதையைச் சொல்லும் ’ஆயிரம் கைகள்’  திருதராஷ்டிரனின் கதையைச் சொல்லும் ‘இருள்விழி’ ஆகியவை வெளிவந்துள்ளன. நூற்றைம்பது ரூபாய்க்குள் விலையுள்ள சிறிய நாவல்கள் இவை.

மறுதொகுப்பு செய்யப்பட்டவை என்றாலும் வாசகர் இவற்றையும் முழுமையான நாவல்களாகவே அணுகமுடியும். கிழக்கு வெளியீடு

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16
அடுத்த கட்டுரைவிழா 2015 கடிதங்கள் -8