இன்று முதல் விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது. இன்று காலைமுதல் ராஜஸ்தானி நிவாஸில் நண்பர்கள் கூடுகிறார்கள். சென்னை, பெங்களூர், திருச்சி பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். அனைவருக்கும் எளிய கூட்டான தங்குமிடமாக ராஜஸ்தானி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளது- பெண்களுக்கு தனி அறைகள் உண்டு. சனி ஞாயிறு இருநாட்களும் உணவும் ஏற்பாடாகியிருக்கிறது.
தேவதச்சன் 26 ஆம் தேதியே வருவார். பல எழுத்தாள நண்பர்களும் கலைஞர்களும் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடனான முறைமைப்படுத்தப்படாத கலந்துரையாடல்கள் நிகழும். எழுத்தாளர்களுடன் நேரடி உரையாடல்களுக்கும் வாய்ப்புகள் அமைக்கபடும். 27 மதியம் வரை சந்திப்புகள் நீளும்
அரங்கில் கிழக்கு வெளியீடாக வந்துள்ள வெண்முரசு நூல்களும் பிறநூல்களும் கிடைக்கும். நான் கோவையில் நிகழ்த்திய கீதை உரை ஒளித்தட்டுகளாகக் கிடைக்கும்.
விழா டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி