அஞ்சலி : சார்வாகன்

sarvakan

 

சார்வாகனின் கதை ஒன்றை கணையாழியில் எண்பதுகளில் வாசித்தேன். யானையின் சாவு என்னும் அந்தக்கதை அன்று உற்சாகமான வாசிப்பனுபவத்தை அளிப்பதாக இருந்தது. குழந்தைகளின் உளவியலுக்குள் இயல்பாகச் சென்ற கதை. அவரைப்பற்றி சுந்தர ராமசாமி என்னிடம் பேசினார். அவர் எழுத்தாளர் என்பதை விடவும் தொழுநோயாளிகளின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு சமூகசேவகர் என்னும் வகையிலேயே முக்கியமானவர் என்றார்.

சார்வாகன் அதிகம் எழுதியதில்லை. சார்வாகன் கதைகள் என ஒரு தொகுதியை நற்றிணை வெளியிட்டுள்ளது. இன்றைய வாசகருக்கு செக்காவ் காலத்தையவை என தோன்றக்கூடியவை அவை. செக்காவின் சாயல்தான் அவற்றின் சிறப்பு. ஆனால் சற்றே காலாவதியான படைப்புகள் என்று தோன்றலாம்.

சார்வாகன் இறப்பு குறித்த செய்தி வந்ததும் அவரைச் சந்தித்திருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். இருமுறை அதற்கான வாய்ப்புகள் வந்தன. தட்டிப்போயிற்று.

சார்வாகனுக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைஎந்திரன் 2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 4