ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது

1

 

மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இவ்வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இயல்புவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர் ஆ. மாதவன். புகைப்படத்துல்லியத்துடன் புறவய உலகைச்சித்தரிக்கும் அழகியல் இது. மானுட அகத்தின் தீமையை ஊசிமுனைக்கூர்மையுடன் தொட்டு காட்டும் படைப்புகள் அவருடையவை.

ஆ.மாதவன் கடைத்தெருவின் கலைஞன். திருவனந்தபுரம் சாலைத்தெருவின் வாழ்க்கையைப்பற்றி மட்டுமே அவர் எழுதினார். பிச்சைக்காரர் முதல் பெருவணிகர் வரை அனைவருமே ஒருவரை ஒருவர் எத்திப்பிழைக்கும் அந்தத்தெரு அவருக்கு இவ்வுலகின் குறியீடாகவே விரிந்தது

ஒருபடைப்பின் படைப்புகளில் மூன்றில் ஒன்று சென்ற மூன்றுவருடத்தையதாக இருக்கவேண்டும் என சாகித்ய அக்காதமியின் விதி இருப்பதனால் ஆ.மாதவனின் இலக்கியச்சுவடுகள் என்னும் கட்டுரைநூலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது முக்கியமான நூல்கள் கிருஷ்ணப்பருந்து புனலும் மணலும் ஆகிய நாவல்களும் ‘ஆ.மாதவன் கதைகள் ‘கடைத்தெருக்கதைகள்’ ஆகிய தொகுப்புகளும்தான்

 

எதிலும் பட்டுக்கொள்ளாத இயல்பு கொண்ட ஆ.மாதவனுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காதநிலையில் விஷ்ணுபுரம் விருது 2010 ல் அளிக்கப்பட்டது. அதையொட்டி அவரைப்பற்றிய ஒரு கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது புனைவுலகை அறிமுகம்செய்யும் ‘கடைத்தெருவின் கலைஞன்’ என்னும் நூலும் வெளியிடப்பட்டது

ஆ.மாதவனுக்கு என் சார்பிலும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நண்பர்கள் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

ஆ மாதவன் ஒரு தொகுப்பு

விஷ்ணுபுரம் விருது , விழா

விழா பதிவுகள்

============================================

ஆ மாதவனுக்கு விருது அ முத்துலிங்கம்

ஆ மாதவன் கடிதங்கள் 1

கடிதங்கள் 2

கடிதங்கள் 3

ஆ.மாதவன் விருது அழைப்பிதழ்

 

================================

ஆ.மாதவன் பேட்டி1
ஆ.மாதவன் பேட்டி 2
ஆ.மாதவன் பேட்டி 3

 

======================

கடைத்தெருவின் கலைஞன் முன்னுரை

மாதவம் 1

மாதவம் 2

தெருமனிதர்கள்

தெருவெனும் ஆட்டம்

கடைத்தெருவைக் கலையாக்குதல்

காந்தளூர்ச்சாலையின் கலைஞன்

முந்தைய கட்டுரைராஜாஜியின் பொருளியல்கொள்கைகள்
அடுத்த கட்டுரைஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்