இரு எல்லைகள்

1

ஜெமோ,

இந்தச்சுட்டியைப் பாருங்கள். இந்தியாவில் பிறந்த ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்காக அவரைக்கொல்லவேண்டும் என்று கோரி ஒருலட்சம் பேர் வெளிப்படையாக பொது இடத்தில்கூடி கோரிக்கைவிடுக்கிறார்கள். அதை நியாயம் என்று நம்மூர் முற்போக்காளர்கள் சொல்கிறார்கள். பாருங்கள் மனுஷோ,மார்க்ஸோ ஞாநியோ ஒருவராவது ஒரு வார்த்தையாவது பேசுகிறார்களா என்று

கிருஷ்ணனையும் ராமனையும் முஸ்லீம்கள் எப்படி எப்படி விமர்சிக்கிறார்கள் என்று விண்  டிவியை ஒருநாலைந்து நாள் பார்த்தாலே காணமுடியும். இதைவிட கடுமையான விமர்சனத்தை இந்து தெய்வங்கள் மேல் ஒவைசி ஊடகத்தில் வெளிப்படையாகச் சொல்லி ஒருமாதம்கூட ஆகவில்லை

நீங்கள் எம்.எம்.பஷீர் பற்றி எழுதியிருந்தீர்கள். பஷீர் செய்ததும் கமலேஷ் திவாரி செய்ததும் ஒரே செயலின் இருபக்கங்கள். பஷீரின் கட்டுரையை மாத்ருபூமி நிறுத்திக்கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் அதை வாங்கமாட்டோம் என்று இந்துக்கள் சொன்னார்கள். அதை நீங்கள் பொறுக்கிகள் என்ற சொல்லால் கண்டித்தீர்கள். சகிப்புத்தன்மைக்காக அறைகூவினீர்கள்

இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று சொன்ன அறிவுஜீவிகள் சொல்லட்டும் , எவரிடம் சகிப்புத்தன்மை இல்லை என்று. சாமானியன் கேட்கவேண்டும் இதை

எம்.சத்யமூர்த்தி

அன்புள்ள சத்யமூர்த்தி

இதில் என் கருத்து இதுவே இஸ்லாமியர் இந்த அளவுக்கு தீவிரத்துடன் இருக்கையில் அதைச் சீண்டுவது தேவையற்ற செயல் என்பதுதான்.

ஆனால் இதை இந்துக்கள் செய்தால் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். இந்துமதத்தின் சாரம் என்பது விமர்சனபூர்வமான அறிவார்ந்த அனைத்து விவாதங்களையும் அனுமதிக்கும் அதன் மனவிரிவுதான். இஸ்லாமியருடன் போட்டிபோட்டு இந்துமதத்தையும் இஸ்லாம் மாதிரி ஆக்க நீங்கள் நினைக்கிறீர்கள், அதை நான் ஏற்கமுடியாது

ஜெ

முந்தைய கட்டுரைகீதை உரைகள்: அனைத்தும்…
அடுத்த கட்டுரைகீதை உரை: கடிதங்கள் 7