இரண்டாயிரம் கடிதங்கள்

1

வெண்முரசு வெளிவரத்தொடங்கியபோது தொடர்ச்சியாக வாசகர் கடிதங்கள் வந்தன. அவற்றை இந்த தளத்தில் வெளியிடவேண்டாம் என நினைத்தேன். ஏனென்றால் வெண்முரசு கதைவரிசையும் கடிதங்களுமாக இணையப்பக்கம் நிறைந்துவிடும் எனத் தோன்றியது.

சில மாதங்கள் கழித்து ஒரு இணையப்பக்கம் ஆரம்பித்து அதில் வாசகர்கடிதங்களைப்போடத் தொடங்கினேன். ஒற்றைவரிப்பாராட்டுக்களைத் தவிர்த்துவிட்டேன். ஏதாவது வாசிப்பதற்கென இருக்கும் கடிதங்களை மட்டும் அதில் தொகுத்தேன்

இன்று பார்த்தபோது 2200 கடிதங்கள் ஆகியிருக்கின்றன. ஒரு இலக்கியப்படைப்பைப்பற்றி இத்தனை வாசகர்கடிதங்கள் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டிருக்குமா என ஆச்சரியமாக இருக்கிறது. பத்தாண்டுக்காலத்தில் இதேயளவுக்க்குக் கடிதங்கள் விஷ்ணுபுரம் பற்றியும் வந்துள்ளன. ஆனால் இரண்டாண்டுகளில் இத்தனை கடிதங்கள் வியப்பூட்டுபவைதான்

இவற்றில் தொடர்ச்சியாக கடிதமெழுதும் வாசகர்களின் கடிதங்கள் உள்ளன. அவ்வப்போது மட்டுமே எழுதும் வாசகர்கடிதங்களும் உள்ளன. வெவ்வேறு அம்சங்களை சுட்டிக்காடி எழுதப்பட்ட கடிதங்கள் இப்போது காலவரிசைப்படி உள்ளன. இவற்றை நூல்வரிசைப்படி ஆக்கி தனித்தனி தளங்களாகத் தொகுக்கவேண்டும் என நினைக்கிறேன்

ஜெ

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைஆசிய உற்பத்திமுறை-கடிதம்
அடுத்த கட்டுரைசகிப்புத்தன்மையின்மை!