தேவதச்சனின் கவிதைகள் அன்றாடத்திலிருந்து தன்னை வடித்து கொள்கின்றன. அவருக்கு கவிதை எழுதுவது கூட ‘ஒரு குண்டு பல்பை ஹோல்டரில் மாட்டுவது போலிருக்கிறது’. சமையலறையில் பொங்கி வழியும் பால் கேலிப் புன்னகையுடன் ‘முன்னொரு காலத்தில்’ என கதைக்கத் துவங்குகிறது. ரேஷன் கடை வரிசையில் நிற்பது கூட அவருக்கு ஒரு யாத்திரை ஆகிறது. அசாதாரணமான சூழல்களை அவர் எதிர்கொள்வதில்லை. ஆனால் அன்றாடத்தில் ஒளிந்திருக்கும் வசீகரமான சிறு மர்மத்தை அவருடைய கவிதைகள் தொட்டெடுக்க முயல்கின்றன.
சுநீல் கிருஷ்ணன் [நரோபா ]எழுதிய கட்டுரை ஆம்னிபஸ் இணையதளம்
=========================================================
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் நிவாஸ் அரங்கில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.
நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது
தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்
தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது
=====================================================================
தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு
தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்
தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்
தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்