சகிப்பின்மை -கடிதங்கள்

வலது மற்றும் இடது இரு பக்கங்களிலும் பெரும்பாலும் கொதித்து எழுவது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தான். இந்தியாவிற்கு எது நல்லது , எது கேட்டது என்பது அர்னாப்க்கு அடுத்து இவர்களுக்கு தான் தெரியும். அமெரிக்காவில் வாழ்ந்த போது இந்தியாவில் உள்ள மக்களிடம் இது போன்ற விஷயங்களை பேசினால் அவர்களுக்கு அதை பற்றி தெரிந்திருக்காது இல்லை அதையெல்லாம் ஒரு விஷயமாக அவர்கள் நினைக்க மாட்டார்கள். பதிலுக்கு அவர்கள் ‘அங்கு அமெரிக்காவில் சொகுசா இருந்து கொண்டு இந்தியாவை பற்றி பேசிக்கொண்டிருப்பீர்கள்’ என்று என்னை திட்டுவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா திரும்பி வாழ ஆரம்பித்த பிறகு இது மிகவும் நிதர்சனமாக புரிகிறது.

கோ.இராசேசு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

அமீர்கான் சர்ச்சை குறித்த வாசகர் கடிதங்களும் அதற்கு தங்கள் பதில்களும் படித்தேன் . முதலில் எல்லா ஊடகங்களும் அவரின் பேச்சின் பிரச்சனைக்குரிய பகுதியை மாத்திரம், மக்களின் உணர்சிகளை தூண்டும் விதத்தில் வெளியிடுகின்றன . இப்பொழுது அவர் ” நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டார்கள் ” என்று மன்றாடுகிறார் .
தனது குழந்தை, சகிப்புத்தன்மை அற்ற இந்திய சூழலில் வளர்வதை விட வெளிநாட்டில் குடியேறி வாழலாம் என்று அவரது மனைவி சிபாரிசு செய்துள்ளார் . ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் அமீர்கானை கறுப்பர் இனத்தை சேர்ந்தவர் என்று தானே கூறுவார்கள் . அங்கே சென்றால் அவர் குழந்தைகள் 14 வயதில் டேடிங் செல்ல தொடங்கும் , அதை சகிக்காமல் மீண்டும் இந்தியா வருவாரா ? ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் நிலை என்ன ?

எதிர்க்கட்சிகளுக்கு, “விருதை திருப்பி கொடுப்பது” என்ற துருப்பு சீட்டு கிடைத்ததை போல் தற்போது மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு அமீர்கான் என்ற துருப்பு சீட்டு கிடைத்துள்ளது .

இந்த எளிய இந்திய மக்களின் மூலம் கோடிக் கணக்கில் பணம் சேர்த்து கொண்டு சுல்தான்கள் போல் வாழும் இவர்கள், தங்களின் பிள்ளைகளை மாத்திரம் வெளிநாட்டில் வளர்க்க முயற்சிகிறார்கள். சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சி நடத்திய அமீர்கானும் , நிஜ அமீர்கானும் வேறு என்றே தோன்றுகிறது .

நிற்க . அமீர்கான் எங்கேயும் போகட்டும் எப்படியும் வாழட்டும், எதையாவது உளறிக் கொட்டி இந்தியாவில் பிரச்சனைகளை உண்டாகாமல் இருந்தால் சரி .

அன்புடன்
பா.சரவணகுமார்
வடசேரி நாகர்கோயில்

அன்பிற்கும், மரியாதைகளுக்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த ஆண்டும் சென்ற ஆண்டும் உங்களை அங்மோகியோ நூலகத்தில் கலந்துரையாடலில் நேரில்பார்த்து உங்கள் விளக்கங்கள் கேட்க வாய்ப்பு கிடைத்தது இனிய அனுபவம்.

தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் “சகிப்பின்மை”கூச்சல்களுக்கு
இடையில் அரிதாக ஒரு பக்குவமான பார்வை வாசிக்க கிடைத்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

A Muslim Lady Shows Mirror to All Intolerance Rants in This Brilliant Article. Do Read It Full !!

அன்புடன்
சபரி
சிங்கப்பூர்

முந்தைய கட்டுரைகீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்
அடுத்த கட்டுரைவிலகிச்செல்பவர்கள்…