பினாங்கிலே…

இன்று காலை சுவாமி பிரம்மானந்தா மற்றும் நண்பர்கள் பாலமுருகன் கோ புண்ணியவான் தமிழ்மாறன் ஆகியோருடன் பினாங்கில் உள்ள லிட்டில் இந்தியா என்ற பழைய தமிழர்பகுதிகளைச் சென்று பார்த்தேன். பழைய இடிந்த கட்டிடங்கள் கொண்ட கடலோரமாக காரில்சென்றபோது எப்போதும் ஏற்படும் அந்த உணர்வு- வரலாறு வழியாக ஒழுகிச்செல்வதுபோன்ற மயக்கம்- ஏற்பட்டது

காலையில் புகழ்பெற்ற தண்ணீஈர்மலை தண்டாயுதபாணி கோயிலுக்குச் ச்ன்றேன். செல்லுமிடமெல்லாம் முருகனைக் கொண்டுசென்ற செட்டியார்கள் நிறுவிய கோயில். பழனி தண்டாயுதபாணியேதான். தண்ணீர் மலை உயரமில்லாத மண்மலை. குறுமீது சிறிய கோயில். சிலை அழகானது.

மாலை இங்கே ஒரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் உரை. எழுத்தும் இலக்கிய எழுத்தும் என்ற தலைப்பில். நேற்று மாலை இன்னொரு ஆசிரியர் பயிற்சிபள்ளியில் ‘இலக்கியத்தின் பயன்’ என்ற தலைப்பில். அடிப்படை விஷயங்கள்தான். ஆனால் அவற்றை திருப்பிதிருப்பிச் சொல்லவேண்டியிருக்கிறது இங்கே. முடிந்தவரை உரைகள் ஒன்றேபோல் ஆகாமல் பார்த்துக்கொள்கிறேன்

பினாங்கின் தட்பவெப்பம் மழை இறுக்கத்துடன் கொச்சி போல உள்ளது. பச்சைக்காடுகள். பனைமரத்தோட்டங்கள். ஆனால் முதல் உலக நகரம்போல ஆகும் துடிப்பில் உள்ளது இந்த நகரம்

முந்தைய கட்டுரைபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்
அடுத்த கட்டுரைபட்டாம்பூச்சி கடிதங்கள்