மேரி மக்தலீன் -கடிதம்

1

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். மேரி மக்தலீன் (பழைய கத்தோலிக்க விவிலியத்தில் மதலேன் மரியாள்) பற்றிய உங்கள் கட்டுரை எனது எண்ணங்கள் பலவற்றைப் பிரதிபலிப்பதாயிருந்தது. திருச்சபை, விவிலிய ஏடுகளினின்றும் விலகி மக்தலீனாவின் வழிசென்று கிறிஸ்து பற்றிய சித்திரத்துக்குக் கூடுதல் அர்த்தங்கள் சேர்க்க முடியும். பர் லாகர்க்விஸ்ட்டின் பாரபாஸ் போல ஒரு அற்புதமான நாவல்கூட அமையலாம்.

இன்னொரு விஷயம், மக்தலீன் திருச்சபை அங்கீகரித்த புனிதை. அவர் பெயரில் தேவாலயங்கள் உள்ளன. இங்கே விழுப்புரம் மாவட்டத்தில் நானறிந்து அவர் பெயரில் இரண்டு தேவாலயங்கள் உள்ளன. நவநாள் உற்சவங்களோடு அவருக்குத் திருவிழாவும் நடத்தப்படுகிறது. பொதுவாக கன்னி மேரிக்கு இணையாக வைத்தே அவர் வணங்கப்படுகிறார்.

அன்புடன்,
அசதா.

அன்புள்ள ஜெ

இருவர் நான் சமீபத்தில் வாசித்த அற்புதமான கட்டுரை. பழைய கட்டுரைதான். ஆனால் நிறைய கட்டுரைகள் இருப்பதனால் இத்தகைய கட்டுரைகள் பின்னால் போய்விடுகின்றன. நன்றி

ஏசுவின் தோழி என்பதனால் மட்டுமல்ல ஏசுவின் ஆன்மாவில் நிறைந்த மதுரம் என்பதனால் மட்டுமல்ல ஏசுவில் இருந்த இடைவெளிகளை எல்லாம் நிறைத்து அவரை முழுமையாக்கியவளென்பதனாலேயே மக்தலீன் முக்கியமானவள்

வைஷ்ணவ மரபிலே பிரபத்தி பெருமாளைவிடப்பெரியது என்பார்கள். அதைத்தான் நினைத்துக்கொண்டேன். அர்ப்பணிப்புள்ள பக்தி தெய்வங்களை அருகே கொண்டுவருகிறது

கண்ணீருடன் வாசித்த கட்டுரை

சாரங்கன்

இருவர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65
அடுத்த கட்டுரைஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்?