«

»


Print this Post

கடிதங்கள்


அன்புள்ள ஜெ,

உங்களது எழுதும் கலை மற்றும் நவீன இலக்கியம் படிதுகொண்டிருகிறேன், 6 வருடத்திருக்கு முன் fountain head படித்தது. மீண்டும் உங்களால் அதன் ஞாபக வாசனை. நான் உயர் தொழிற்கல்வி பயிலவில்லை. முதுநிலை கணிதம் பயின்றேன். “Fountain Head” இல் ” Howard Roark,” மூலமாக rand கூரமுற்பட்டதை நான் புரிந்து கொண்டவகையில் தத்துவங்களும் , மரபு சார்ந்த கட்டிட கோட்பாடுகளை எளிய வடிவில் utility value விற்கு ஏற்ப மாற்றி அணுகுவது என்பதை தான், இதுதான் அக்கால கட்டதில் out of box thinking ஏற்படுத்தியது. மேலும் Roark தனது வாழ்வில் பலமுறை வீழ்வதும் பின் எழுவதும் , அவனது காதல் அனைத்துமே ஒரு மாற்று பாதையில் இருந்தது,

Will durand , படித்ததில்லை. உங்கள் மூலமாக எனது படிக்க வேண்டிய லிஸ்டில் சேர்த்துவிட்டேன். கரூர் வரும் பொது அவசியம் எனக்கு ஒரு செல்லிடை அழைப்பு தாருங்கள், உங்களை சந்திக்கவேண்டும். betrand russhel, rahula sangrithiyan (வோல்கா முதல் கங்கை வரை) பற்றி கூறுங்களேன்.
அன்புடன்,
சுந்தர்.

அயன்ராண்ட் பற்றி பழைய கட்டுரைகள்

http://www.jeyamohan.in/?p=3467
http://www.jeyamohan.in/?p=3407
http://www.jeyamohan.in/?p=3411
http://www.jeyamohan.in/?p=3414
http://www.jeyamohan.in/?p=3464
http://www.jeyamohan.in/?p=3467
http://www.jeyamohan.in/?p=3477

அன்புள்ள சுந்தர்

வில் துரந்த் மேலைச்சிந்தனைகளை எளிமையாக அறிமுகம்செய்பவர். எதற்காக படிக்கவேண்டுமெனச் சொல்கிறேன் என்றால் அந்நூலை படித்த ஒருவர்க்கு அயன் ராண்ட் ஒரு அசல் தத்துவஞானி என்ற பிரமை கலையும். அமெரிக்க நடைமுறைவாதத்தின் எளிய துளியே அவர் எனபுரியும் என்பதனால்

பார்ப்போம். ரஸல் பற்றி எழுத எண்ணம் உண்டு. ஆனால் ராகுல சாங்கிருத்யாயன் பற்றி உயர்வான எண்ணம் எனக்கில்லை

ஜெ

அன்புள்ள ஜெ!
மருத்துவம் சம்மந்தமான தங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.எனினும் இதில் மருத்துவர்கள் ஒரு அடியாள் மட்டுமே(பொருளாதார அடியாள் போல் மெடிக்கல் ஹிட்மேன் ) அவர்கள் பின்னால் அரசும் ,நிறுவனங்களும் மறைமுகமாகக் கை கோர்த்துச் செயல் படுகின்றன.சமீப கால சாதனையான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அரசாங்கம் மக்களின் நலத்தை ஒரு இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் அடகு வைத்து விட்ட ஒரு திட்டம்.மக்களின் நலத்திற்காக வருடம் தோறும் 400 கோடி ரூபாய்களை நேரடியாகச் செலவளிக்காமல் அதை ஒரு இன்ஷ்யூரன்ஸ் கம்பனியிடம் கொடுத்து ,அந்தக் கம்பனி வெறும்
௧௦௦ கோடியை மட்டும் செலவளிப்பது அப்பட்டமான ஊழலாகும்.
இன்னும் சில காலத்தில் இந்த கம்பெனிகள் சொல்வது போல் தான் மருத்துவர்கள் சிகிச்சை செய்ய வேண்டிஇருக்கும்.இது தான் அமெரிக்காவில் நடை பெற்று வருகிறது.இது நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் பால் க்ருக்மெனின் கருத்து.

அரசாங்கமே நடத்தினால் ஏற்படும் குறைகளைக் க்ளைந்து செயல்படவேண்டும்.ஊடகம்,சினிமா இவற்றுக்குஅடுத்த கட்டமாக அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மருத்துவமனைகளுக்குக் குறி வைத்துள்ளனர்.வெகு விரைவில் தமிழகம் முழுதும் மருத்துவமனைகளை வாங்கியும் கட்டியும்
இந்த மக்கள் வரிப்பணம் தங்களுக்கே வருமாறு செய்வார்கள் என்று நம்ப இடமிருக்கிறது.

பி.கு: நானும் ஒரு மருத்துவன்.மருத்துவர்கள் சொல்வதை மறுக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது.ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் மாற்றுக்கருத்தை ஏற்பதில்லை.நவீன மருத்துவம்
சில எல்லைகளுக்குட்பட்டது.மருத்துவர் அந்தத் துறையில் சற்று அதிக அறிவும் அநுபவமும் உள்ளவர்.அவ்வளவெ.
நன்றி

rampsych

2010/09/04 at 1:16 am

அன்புள்ள ஜெ
நான் ஒரு மருத்துவன்.எனினும் எனக்கேற்பட்ட அதிர்ச்சியான அனுபவம் மருத்துவர்கள் எவ்வளவு வணிகரீதியாக
மாறிவிட்டார்கள் என்பதற்கு ஒரு ஆதாரம்.ஒரு மருத்துவர் இன்னொரு மருத்துவரிடமோ அவர் மனைவி குழந்தைகளிடமோ ஃபீஸ் வாங்குவதில்லை.இது மிகவும் அடிப்படையான ஒரு தார்மீக மரபு மட்டுமன்றி ஹிப்போகிரேடஸ் பெயரால் மருத்துவர் அனைவரும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி.இதுவரை என்னிடமோ என் குடும்பத்திடமோ யாரும் ஃபீஸ் வாஙியதில்லை(லேப், மருந்துச் செலவிகள் தவிர)
ஆனால் சமீபத்தில் தற்செயலாக வேரு வழியின்றி சென்னை சென்ற இடத்தில் என் குழந்தைக்கு லேசான சளி வழக்கமாக வரும் வீஸிங்க் வந்து ஒரு குழந்தை மருத்துவரிடம் சென்றோம் .அவர் மூன்று தினம் கட்டாயம் வரவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் நானும் மருத்துவன்,என் மனைவியும் மருத்துவர் என்று நன்கு தெரிந்தும் ஒவ்வொரு முரையும் இருநூறு ரூபாய் ஃபீஸ் வாங்கினார்.போனால் போகட்டும் ethics தெரியாதவர் என்று விடலாம் என்றால் போட்டாரே ஒரு குண்டு !என் குழந்தைக்குத் தேவையே இல்லாத ஒரு இரத்தப் பரிசோதனை மற்றும் ஒரு MRI ஸ்கேன் என்று 7500 ரூபாய்களுக்கு டெஸ்ட் கட்டாயம் செய்ய வேண்டும் என்றார்.இது அவசியம் தேவையா என்று கேட்டதற்கு எங்களை மடையர்கள் போல் கருதி திட்டினார்.குழந்தையை விட பணமா முக்கியம் என்று மலிவான வசனம் பேசினார்.கிட்டத்தட்ட குண்டனாமா சிறையிலிருந்து தப்பிப்பது போல் தப்பித்தோம்.
ஒரு மருத்துவனுக்கே இந்த கதி என்றால்….சாதாரண மக்களின் கதி?

மருத்துவர்கள் கேள்விகட்கு அப்பாற்பட்டவற்களாக மக்களின் பயத்தையும் அறியாமையையும் மூலதனமாக்கிக் கொல்கிறார்கள்.கல்வி ,மருத்துவம் போன்றவற்ரில் தனியார்மயம் தேவயற்றது மட்டுமல்ல ஆபத்தானது.
பி.கு இந்த மருத்துவர் போல் ஒரு சிலர் இருக்கின்றனர்.துரதிர்ஷ்ட வசமாக அவர்களே பிரபலமாக இருக்கின்றனர்.என் மனைவிக்கு ஒரு காசு வாங்காமல் அறுவை சிகிச்சை செய்தவர்களும் இருக்கின்றனர்.

நன்றி

rampsych

அன்புள்ள ராம்

உங்கள் அனுபவம் முழுக்க முழுக்க சாதாரண நிகழ்ச்சி. மருத்துவம் லாபவெறி கொள்ளும்போது அது பகல்கொள்ளையாகவே ஆகிவிடும். ஏனென்றால் அங்கே ஒரு தரப்பு முழுமையான அறியாமையுடன் இருக்கிறது. மருத்துவனை நம்பி தன் உயிரை ஒப்படைக்கிறது. அந்த நம்பிக்கையை வைத்து சுரண்டுவதென்பது மிக எளிய ஒன்று

எனக்கும் இன்றைய காப்பீடு பற்றி மிக எதிர்மறையான எண்ணங்கள் உள்ளன. அது ஒரு மாபெரும் ஊழலின் வெளிப்பாடு. இந்த ஒருவருடத்தில் மட்டுமே ஒரு முக்கியமான மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு என்ன செலவாகுமோ அதேபோல நான்குமடங்கு பணம் காப்பீட்டுச் சந்தாவாக அளிக்கப்பட்டுள்ளதாம். நான்குவருடங்களில் அளிக்கபபடும் காப்பீட்டுப்பணம் இருந்தால் இப்போதுள்ள அரசு மருத்துவமனைகளை இருமடங்காக ஆக்கிவிடலாமாம். இத்துறைகளில் சேவை செய்யும் நண்பர்கள் சொன்னார்கள்

மருத்துவ வசதி என்பது மக்களின் உரிமை, ஆகவே ஜனநாயக அரசின் கடமை. இங்கே அரசு அதை தனியாருக்கு கையளித்து ஒதுங்கி விடுகிறது. அதில் ஊழல் செய்து பங்கும் பெறுகிறது ஆளும்கட்சி. இது மிக அபாயகரமான ஒன்று

ஜெ

நலம் பற்றி பழைய கட்டுரைகள்

http://www.jeyamohan.in/?p=7639

http://www.jeyamohan.in/?p=5494

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/8081